ஆகஸ்ட் 15



புரட்சியால் புன்னகை பூத்த நாள்
எழுச்சியால் ஏற்றம் கண்ட நாள்
அகிம்சையால் ஆதிக்கம் செய்த நாள்
அந்நிய ஆட்சி அடியோடு வீழ்ந்த நாள் !

என்றெல்லாம் சொல்லி சொல்லி
நம்மை நாமே புகழ்ந்ததெல்லாம் போதும் !
உண்மையென்று பார்த்தால் மாறவில்லை
நம் வாழ்வு -இதை கூற
நம் வாழ்க்கை முறை கூறும் !

அடிமை என்னும் சங்கிலியால்
அடை பட்டு கிடந்தோம் !
அகிம்சை என்னும் உளி கொண்டு
அறுத்தெரிந்து நடந்தோம் !
இன்னுயிரை ஈந்து இந்நாட்டை காத்தோம் !
இன்று தன்னுரிமை பேச - அன்று
பல தலைவர்களை இழந்தோம் !

மீட்டு விட்டோம் மீட்டு விட்டோம்
என்று மார்தட்டி கொண்டோம் !-இன்று
கூறு போட்டு எடுக்கிர்றார்கள்
தொலைகாட்சியோடு மறந்தோம் !

ஜாதி மத பேதமில்லை நம் நாட்டில் !-ஆனால்
ஜாதிகொரு கட்சி உண்டு பதிவேட்டில் !
பல மடங்கு விலை குறைப்பு பட்ஜெட்டில் !
பலர் வாழ்வு இன்றும் தொடருதம்மா ரோட்டு ஒட்டில்!

அந்நியர்களின் கொடுமைகளை ஒழித்துவிட்டோம் -அன்று
நம் நாடு மக்களின் ஒற்றுமையை கொண்டு !
அண்டைய மாநிலத்தின் அரவணைப்பை
இழந்து விட்டோம் இன்று !- நாட்டில்
ஆளுக்கொரு சட்டம் கொண்டு ஒற்றுமையை கொன்று !

அங்கங்கு கலவரம் வெடிக்குமாம் !
உள் நாட்டில் போர் நடக்குமாம் !
எல்லையை சுற்றி படை நிற்குமாம் !
எண்ணிக்கை இல்லாமல் குண்டு வெடிக்குமாம் !
சாலைகள் தோறும் பிணங்கள் கிடக்குமாம்!
மூலைக்கு மூலை கொடுமை நடக்குமாம் !

காலை எழுந்து நாளிதழ் படித்தால்
அமைதி பூங்கவாம் இந்தியா !அண்டய நாடுகள் பங்கு கேட்குமாம் !
ஆண்டு தோறும் ஆள் அனுப்பி சமரசம் பேசுமாம்!
மீட்டு வந்த நாட்டை காத்து கொண்டு
இருக்கிறோமா? - இல்லை
கோட்டை விட்ட பின்பு
பூட்டு போடு வாழ்கிறோமா?

இந்திய பூங்காவில் நேற்று பூத்த பூக்கள்
நாட்டுக்காக உதிர்ந்து விட்டன !- ஆனால்
நாளை பூக்கும் பூக்கள் உதிர்ந்து விடக்கூடாது !-மாறாக
மலர்ந்து மணம் வீச வேண்டும் -
மணம் வீசும் எண்ணம் மலருக்கு உண்டு - அதை
மலர வைக்கும் உரிமை உங்களுக்கே உண்டு !
பெற்று விட்ட சுதந்திரத்தைகொண்டாடும் இந்நாளில் -நாம்
கொண்டுள்ள சுதந்திரத்தை எண்ணி பார்க்க வேண்டும் !

விரட்டி விட்டோம் விரட்டி விட்டோம் -என்று
மார் தட்ட வேண்டாம் -மீண்டும்
ஒப்பந்தம் போட்டு அடிமைகளாய்மாறிவிட்டோம்
இதை மறுக்கவும் வேண்டாம் !

கல்வி கூடமெல்லாம் பலசரக்கு கடை போல
காணும் இடமெல்லாம் இருக்க - என்
நண்பர்களின் எதிர்காலம் கனவாகி போச்சே !
நாம் தான் இந்தியாவின் முதுகெலும்பாம் !நாம் தான் இந்தியாவின் தூண்களாம் !
நாளைய இந்தியாவை தூக்கி நிறுத்தும்
இளய சக்திகளாம் !

இந்நாட்டு தூண்களெல்லாம்
அயல் நாட்டில் அடித்தளமாய் !-இந்நாட்டின் முதுகெலும்பு
அயல்நாடவரில் அடிகொம்பாய் !
எப்படி அமையும் என்நாடு வலுவாய் ?
எப்போது உருவாகும் நம்நாடு புதிதாய் ?

குற்றம் ஏதும் சாடவில்லை பொதுவாய் !
சுற்றம் சேரா வாழ்க்கையில்லை புதிதாய் !
சற்று சிந்தித்து ஒன்று சேர்ந்து எழுவாய் !
நம்மை மார்போடு வாரி அணைப்பாள் நம் தாய்!
தமிழ் தாய்க்கு பிள்ளை என்று
பிறந்து விட்டோம் புதிதாய் !
தாய்க்கு தொல்லை வந்தால்
தோள் கொடுத்து காத்து நிற்ப்போம் ஒற்றுமையாய்!

வாழ்க பாரதம் ! வாழ்க பாரதம் ! வாழ்க பாரதம் !
ஜெய்ஹிந்த் !



0 Comments:

Post a Comment