நான் நட்பு பேசுகிறேன் !

நட்பு என்பது எதாவது
புதுமையான ஆயுதமா?
அதனை கையாள்வது
அவளவ்வு சாத்தியமா?

நீ இல்லை என்றால்
நான் இல்லை என்பதா நட்பு ?-இல்லையடா !
யார் இல்லை என்றாலும்
நான் இருகிறேன் - அதானடா நட்பு !

நட்புடன் பேசு ! -அது எப்படி ?
நட்புடன் பேசுவது ?
பழ வகைகள் பதினாறும் கொண்டு
தாம்பூல வகையோடு
சம்பந்தி சரிசமமாய் பேசுவதா ?
இல்லை ! இல்லை !

நீ எப்பொழுதும் தொடர்பில் இரு !
உன் நட்பை தொடர்ந்து கொண்டிரு !
நீ என்றும் நட்புடன் இருப்பாய் !

உயிர் நண்பன் என்றால்
நீ இறந்தால் அவனும் இறந்து விடுவனோ ?
இருக்கலாம் !
அன்று பிசிராந்தையார் நட்பு உயிர் நட்பு !
கோபெருன்சோழனுக்காக கோமகன் உயிர் பிறந்தார் !

அது புராணகாலம்! - இது
பூ" ரண" காலம் !
நட்பு என்பது கொடுக்கல் வாங்கல் இல்லை!
உணர்சிகளும் உண்மைகளும் !

உயிர் விட தேவை இல்லை
உன் நண்பனுக்காக !- அவன்
உயிருக்கு உயிராய் இரு !

ஒவ்வொருவனுடைய வெற்றி
வரலாற்றையும் ஓரமாய் கடந்து பார் !
அவன் பின்னால் நிச்சயம் ஒரு நண்பன் இருப்பான்!
அவன் நண்பனாய் இருக்க மாட்டான்!-
அவன் குறிகோளாய் இருப்பான் !
அவனுடைய வெற்றியை இருப்பான் !

சொல்லில் அடக்க முடியா
வாழ்கையை வென்ற வரலாறுகள் !
ஒவ்வொன்றாய் எடு !
கவனமாய் படி !- ஒரு முறை
திரும்பி கடந்த காலத்தை கேட்டு பார் !

நண்பர்கள் சேர்ந்து பெற்ற வெற்றிக்கு
ஒரு நண்பனின் பெயர் மட்டும் பொறிக்கப்பட்டுள்ளது !
மற்றொருவன் பெயர் எங்கே..
காதல் கதை என்றால் இருவரின் பெயர்
நிச்சயம் வரலாற்றில் இருக்கும் !
நட்பில் மட்டும் என்ன மாற்றம் !-அது
நட்புக்கு மட்டுமே உள்ள மகத்துவம் !

அதற்கு காலமே பதில் சொல்லும் !
முன் நின்று ஜெயித்தவன் வரலாறு ஆனான் !
துணை நின்றவன் அவன் மனதில்
மறையாது போனான் !

பல வரலாறுகள் உருவானது
என்னவோ பெண்ணால் தான் !- ஆனால்
தீர்வு காணப்பட்டது என்னவோ ?-நண்பர்களால்தான் !

"நான் உலகையே ஜெயிப்பேன்
நண்பா நீ என் பக்கமிருந்தால் "
- அன்று அலெக்சாண்டர் அறிந்திருக்கிறான்
நட்பின் அதிசயத்தை!

"என் எண்ணங்களுக்கும்
என் குடும்பத்துக்கும்
உயிர் கொடுத்தவன் என் நண்பன் "
-கார்ல் மார்க்ஸ் அறிந்திருக்கிறான்
நட்பின் மகத்துவத்தை !

அன்றைய பிசிராந்தையர் முதல்
இன்றைய பில்கேட்ஸ் வரை
நன்றாய் நான் அறிந்திருக்கிறேன் !
உலகை வெல்ல உண்மையான
நட்பு ஒன்று போதும் !

காசு கொடுத்து வாங்கி விடவா
முடியும் எந்த நட்பை ?
உள்ளம் கொடுத்து
வாழ்ந்து காட்டத்தான் முடியும்
இந்த நட்பை !



0 Comments:

Post a Comment