என் உயிர் தலைவா ...!

இன்று (12.12.2006)
என் உயிர் தலைவனுக்கு
உதய திருநாளாம்....!

என் இதயத்தில் இடம் பிடித்த
நேரில் பார்த்து பழக்கமில்லா
பகலவனுக்கு புது பிரவேசமம் !

எட்டாம் ஏட்டில் அடி எடுத்து
வைக்கும் என் உயிர் நாயகனின்
அடுத்த பிரதியாம் ...!

தலைவா ..!
உன் வாழ்க்கையை பார்த்து
பலர் வாழலாம் !
ஆனால் ....!
உன் வாழ்க்கையை போல்
யாராலும் வாழ முடியாது ...!

நீ எந்நிலையிலும் சரி!
இக்கலையிலும் சரி!
உனக்கு நிகர் நீயே தான்...!

தலைவா...!
உனக்கு பல கோடி வாழ்த்துக்களில் ஒன்று!
பல கோடி குரல்களில் ஒன்று!
................................... என்னுடையது !



மறுபக்கம்

பெண்ணே!
உன் பார்வை என் மனதில்
ஆயிரம் கவிதைளை உருவாக்கும்
என்று மனம் சொலியது!
ஆனால்!
என் மனதில்
பல்லாயிரகணக்கான துன்பங்களை
உருவாக்கும் என்று
சொல்லவில்லையே!



விழிமொழி

வல்லின எழுத்துகளுக்கு
வயதாகி விட்டன போலும்!
உன் வயதை வர்ணிக்க
அது வாகப்பட்வில்லை!

மெல்லின எழுத்துகளும்
மெலிந்து விட்டன போலும்
உன் மேன்மையை வர்ணிக்க
அதனிடம் வன்மை இல்லை!

இடையின எழுத்துக்களுக்கும்
எதோ இடையுறு போலும்
உன் "இடை" வெளியை
வர்ணிக்க அது இணங்கவில்லை!

முற்று பெறா வாக்கியங்களால்
முடிவை மாற்றி கொண்டேன்!

உன்னழகை மொழியால்
வர்ணிக்க போவதில்லை!
என் விழியோடு
நிறுத்தி கொள்வதென்று!