காதலித்துப்பார்

பார்ப்பார் தொடர்வார் பின்தொடர்வார் !
ஹாய் சொன்னால் போதும் காதல் என்பார் !
 சிரிப்பார் சிலிர்ப்பர் உயிர் பெறுவார் !
 நண்பர் அன்பெருக்கெல்லாம் ட்ரீட் தருவார் !
 உண்பார் தின்பார் நல்ல உடையெடுப்பார் !
 பார்க்கும் இடமெல்லாம் படத்தையே சித்தரிப்பார் !
 காதல் கோட்டை கட்டி கனவுலகில் பறந்திடுவார் !
 அப்பர் சுப்பரெல்லாம் தடுத்து நிற்ப்பார் !
 நண்பர் படை கொண்டு விடை பெறுவார் !
 காடு மேடு சுற்றி களைத்திடுவார் !
 காதலி புத்தி சொல்லி நிலைபெறுவார் !
 முயன்று உழைத்து வாழ்வில் முக்தி பெறுவார் !
 வாழ்க்கை வானவில்லகும் காதலித்துப்பார் !இதயக்கனி

நிமிடத்துக்கு ஒருமுறை
             நிஜமாய் நினைக்கிறன் !
அவள் என்னை பார்க்கையில்
             அழகாய் சிரிக்கிறேன் !
காணப் பொழுதில்
               கவலையில் இருகிறேன் !
 பார்காவில்லை என்றால்
                மறுகணம் இறக்கிறேன் !

 உறவாய் இருந்து உயிரில் கலந்து
            நிலவில் இருந்து அழைக்கிறாய் !
 பிரிவாய் இருக்கும் துயரை
            நினைத்தால் இருந்தும் இறக்கிறேன் !

 பூவாய் பிறந்து கனவில் வளர்ந்து
              உயிரை ஏனோ கொல்கிறாய்!
 என் வழியில் நடந்து விழியில் இருந்து
             என் உலகை அழைத்து செல்கிறாய் !