பார்ப்பார்
தொடர்வார் பின்தொடர்வார் !
ஹாய் சொன்னால்
போதும் காதல் என்பார் !
சிரிப்பார்
சிலிர்ப்பர் உயிர் பெறுவார் !
நண்பர்
அன்பெருக்கெல்லாம் ட்ரீட் தருவார் !
உண்பார்
தின்பார் நல்ல உடையெடுப்பார் !
பார்க்கும்
இடமெல்லாம் படத்தையே சித்தரிப்பார் !
காதல்
கோட்டை கட்டி கனவுலகில் பறந்திடுவார் !
அப்பர்
சுப்பரெல்லாம் தடுத்து நிற்ப்பார் !
நண்பர்
படை கொண்டு விடை பெறுவார் !
காடு
மேடு சுற்றி களைத்திடுவார் !
காதலி
புத்தி சொல்லி நிலைபெறுவார் !
முயன்று
உழைத்து வாழ்வில் முக்தி பெறுவார் !
வாழ்க்கை
வானவில்லகும் காதலித்துப்பார் !
Nice !! nice rhymings :)