சின்னஞ்சிறு பூக்கள்

என் தோட்டத்தில் பூத்திருக்கும் 
ஒரே ஒரு பூ மட்டும் - எனக்காக 
அழகாக பூத்திருக்கிறது !
உனக்கு கொடுப்பதற்காக !

                  ***************

கருமணி விழியோடு 
       உறவாய் கலந்தவளே ! -நாளில்
ஒரு மணி நேரமாவது 
        எனக்காக ஒதுக்கு !

                   ***************

உன்னை நினைத்து கிறுக்கி 
     வைத்தாலும் - அது 
சுருக்கி எழுதிய ஹைக்கூவாம்!

                     **************

தூங்காமல் உன்னையே 
      நினைத்து கொண்டிருந்தேன் !
நீ எப்படி தூங்குவாய் என்று !

                ***************

சிறைக்குள் சிக்கிவிட்டேன் !
   தண்டனை பற்றி 
தகவல் இல்லை ! - அதன் 
    தடங்கள் மட்டும் தென்படுகிறது !
 ஆம் ! நான் காதலிக்கிறேன் !

                    ***********                          

எதையும் மாற்றும் 
             எந்த காதல் !
இயற்கையாய் தொடரும் 
         இதய துடிப்பையும் தான் !
உன் கண் பார்க்கும் 
          இரண்டு நிமிடம் மட்டும் 
என் இதய துடிப்பு 
         இரண்டு மடங்காகும் !

         ***************

தீடிரென தீப்பற்றி கொண்டது
          என் மனக்கூரையில் !
 காரணம் தீப்பொறிகள் அல்ல !
   அவளின் அழகு விழிகள் !

 உயிரே உனக்குள்ளும்
           உயிராய் எனக்குள்ளும்
 நம் காதல் !
 3 Comments:


machan mudiyala da, etha ellam yari nenaichu eluthura da, ennaku intro kudu !!! :)kandu puduchittenna intro tharen machan...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.


Post a Comment