என்னை பற்றி !

 சொந்த ஊர் புதுக்கோட்டையில் உள்ள அரையப்பட்டி என்ற சிறிய கிராமம். என் அப்பா அம்மாவின் பெயர் அருணாசலம்- தவமணி. எனது பெற்றோர்கள் விவசாயிகள்.எனது சகோதரர்கள் பெயர் அருள், கலைச்செல்வம், ஆனந்தபாபு.

ஆரம்ப பள்ளி முதல் உயர் நிலை பள்ளி வரை படித்தது அரையப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில், பிறகு மேல்நிலை படிப்பு ஆலங்குடியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில். பிறகு கல்லூரியில் இளங்கலை கணிபொறி அறிவியல் புதுக்கோட்டையில் உள்ள மாமன்னர் கல்லூரியில்.ஏராளமான ஆச்சர்யங்களும் அனுபவங்களையும் கடந்து எம்.சி.எ சென்னையில் உள்ள DMI கல்லூரியில் மூன்று வருடங்கள்.படிப்பு முடிந்து தற்பொழுது சென்னையில் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை.

படிப்பு,வேலை இவைகளை கடந்தது எனக்கு பிடித்த விஷயங்கள் பல. மிகவும் சந்தோசமாக உணரும் தருணத்தில் கவிதை என்று நினைத்து சிலவற்றை எழுதுவது வழக்கம். விளையாட்டில் கிரிக்கெட் என்றால் அதிக ஆர்வம். புத்தகங்கள் படிப்பது ,படித்தவற்றை அனைவரிடமும் பகிவது அன்றாட வழக்கம். இதை தவிர ரஜினி என்றால் அதிகம் பிடிக்கும். அவருடைய படங்களை குழந்தையை போல் ரசிப்பவன்.
பாடல்களில் இளையராஜா,வைரமுத்து ரசனைகளின் ரசிகன். எழுத்தாளர்களில் சுஜாதா அவர்களின் தீவிரமான மாணவன் நான் . ஆசானிடம் தினம் தினம் கற்று கொண்டு இருக்கிறேன்.அரசியலில் யாரையும் சாராதவன், வைகோ அவர்களின் பேச்சுக்கு தீவிர ரசிகன். அதை தவிர்த்து பட்டி மன்றகளையும் , சுகி சிவம், ஞானசம்பந்தன்,தென்கச்சி ஆகியவர்களின் கருத்துகளை ரசிப்பவன். புத்தகங்கள் வசிப்பதை கடமையாக கருதுபவன். நண்பர்கள் என்ற நல்லவர்கள் நிறைய பேர் உண்டு.

அதிகம் பிடித்த இடம் அரையப்பட்டிதான். நெறைய சொந்தங்களையும் நல விசாரிப்புகளையும் கொண்ட இடம் என்பதால். அதை தவிர நண்பர்களுடன் பயணம் செய்ததில் கேரளாவில் பல இடங்கள் என்னக்கு மிகவும் பிடித்தவை. இன்னும் நிறைய இருக்கு ... நிறைவாய் இருக்க...