அவளின்றி ஓர் அணுவும் ......!

இப்போதெல்லாம்
என் இதயம்கூட
வேகமாக துடிப்பதில்லை!
உள்ளிருக்கும்
என் உயிருக்கு வலிக்குமே என்று!

என் இமைகள் கூட
வேகமாக துடிப்பதில்லை !
உன் தரிசனம் கிடைக்கும் பொது
உள் கட்சி பூசல் வேண்டாம் என்று!

என் கால்கள் என்ன விதிவிலக்கா ?
உன்னை கண்டு செல்ல
வேண்டுமென்றே கடிகார முட்கள்
போன்று கணிசமாக கடக்கிறது!

ஆனால் என் கைகள் மட்டும் விதிவிலக்கு!
உன்னுடைய ஓர
பார்வைக்கே ஓராயிரம்
கவிதைகள் என் வசம்!

சற்று நேரம் சிந்தித்த பின்பே
தெரிந்து கொண்டேன்!
என் உடலில் ஒரு அணு அசைந்தாலும்
அது உன்னை நினைத்தே அசைகிறது என்று!



0 Comments:

Post a Comment