அறியாத காதல்

பெண்ணே
கள்ள பார்வையும் காந்த சிரிப்பும்
கொண்ட உனக்கு ஏன் இவ்வளவு கஞ்சத்தனம் !
என்னை காதலி என்றுதானே சொன்னேன்!
என் ஆருயிர் காதலியே !
முறையாக அறியாத அந்த மூன்றெழுத்து
வார்த்தையை கூட புரியாத உனக்கு
ஏன் வன்மையும் கர்வமும் கொண்ட
வக்கற்ற மூன்றெழுத்து வாழ்வு ஏன்?
நீ நிலவில் வசிக்கிறாய் என்றல் கூட
நம்பும் நவகிறுக்கன் நான்!

ஏனென்றால்!
அந்த முழு நிலவில் தானே உன்னை கண்டேன் !
பவுர்ணமி நாள் நிலவில் கூட
முழு நிலவும் நீதான் தெரிந்தாய்!
ஊரே பார்க்கும் உலக நிலவில் அல்ல !
எந்த மன்னவனின் உள்ளம் என்னும் நிலவில்தான் !0 Comments:

Post a Comment