விழிமொழி

வல்லின எழுத்துகளுக்கு
வயதாகி விட்டன போலும்!
உன் வயதை வர்ணிக்க
அது வாகப்பட்வில்லை!

மெல்லின எழுத்துகளும்
மெலிந்து விட்டன போலும்
உன் மேன்மையை வர்ணிக்க
அதனிடம் வன்மை இல்லை!

இடையின எழுத்துக்களுக்கும்
எதோ இடையுறு போலும்
உன் "இடை" வெளியை
வர்ணிக்க அது இணங்கவில்லை!

முற்று பெறா வாக்கியங்களால்
முடிவை மாற்றி கொண்டேன்!

உன்னழகை மொழியால்
வர்ணிக்க போவதில்லை!
என் விழியோடு
நிறுத்தி கொள்வதென்று!0 Comments:

Post a Comment