மானிட ரோபோக்கள்

உயிரை அழகாய் படைத்தவன் இறைவன் !
மானிட இயல்பை மாற்றிவிட்டான் மனிதன் !

சிந்தையில் சாதித்த மனித குலம் - ஆட்டு
மந்தை போல வாழும் மகா கேவலம் !

தட்டிவிடும் குச்சிக்கு தாவி ஆடும் குரங்கை போல
கட்டி ஆடும் காசுக்கு குதித்து ஓடும் குதிரை போல
சுயத்தை இழந்து விட்டான் மனிதன் !
சுகத்தை அடையும் வழியில் !

சட்டியில்  கொழம்பு வைத்து 
        வட்டியிலே சோறு வைத்து 
கட்டிலிலே படுத்த காலம்
          கரையேறி போச்சு !
கணிபொறி சுட்டியிலே  
          மனதை வைத்து 
பெட்டியிலே பணத்தை நிரப்ப 
           O.T யிலே ஓடும் காலம் 
சிட்டி வாழக்கை ஆச்சு !

மனிதன் முழுதாய் மாறிவிட்டன ! - அவன்
மனதை கழட்டி எங்கோ மாட்டிவிட்டான் !

உற்றார் இறந்தாலும் ஒரு சொட்டு
           கண்ணீர் விட நேரமில்லை !
பெற்றோராய் இருந்தாலும்
            உடனே வரும் தூரமில்லை !

கற்றவர்கள் என்று கூறி
     காசுக்கு விற்கப்படும்
கற்கால மனிதர்களின்
       கடைசி பிள்ளைகள் - இந்த
மானிட ரோபோக்கள் !

இவர்கள் புத்திசாலிகள்
            என்றழைக்கபடும் அடி முட்டாள்கள் !
குழந்தையின் சிரிப்பை ரசிக்க
            தெரியாத குற்றவாளிகள் !
இயற்கையின் வலிமை அறிய
            இயந்திர அடிமைகள் !
கூவும் குயிலை மறந்து திரியும்
       கிணற்று தவளைகள் !
வயல் வெளியை மறந்து விட்ட
      வசதி படைத்தவர்கள் !

நீங்கள் ....!
பாக்கள் கொண்டு கவி பாட வேண்டாம் ! - ரோட்டோர
பூக்களை கொஞ்சம் ரசித்து செல்லுங்கள் !
குயில் பாட்டை கேட்க காட்டுக்கு செல்ல வேண்டாம் !
குழந்தையின் சிரிப்பில் கொஞ்சம் மூழ்குங்கள் !
சுற்றமும் நட்பும் கூடி குலாவ வேண்டாம் !
பெற்றோரின் நலனயாவது கருத்தில் கொள்ளுங்கள் !

இருக்கும் பொழுதில் இனியாவது மாறிவிடு !
இருக்கும் உலகை இனி வருபவர்களுக்காவது மாற்றி கொடு !


உனக்காக காத்திருந்து..!


விடிகாலையில்
             உன்னை காண வந்தேன் !
காத்திருந்தே ...
சலிப்படைந்து - என் 
நிழல் கூட இளைப்பாற 
         சென்று விட்டது !

நான் சாய்ந்து நின்றிருந்த 
மரம் கூட முணுமுணுத்துக் 
கொண்டே இலைகளை 
என்மேல் வாரி இறைக்கிறது!

நான் இருந்தும் பயமில்லை !
காதலனை அழைக்கிறது கூவும் குயில்!

பார்த்துக்கொண்டே 
        இருக்கும் வரை ஒன்றுமில்லை !
படுத்து உறங்க 
         முயற்சித்தால் முடியவில்லை !
                      - அவளது கண்களால் ..

நகம் கடித்துக்கொண்டே 
உடலில் நயம் இல்லாமல் 
சிரித்துக்  கொண்டே இருக்கிறேன் !

நான் பார்த்து கொண்டிருந்த
         சாலை கூட பாம்பு போல 
நெகிழ தொடங்கி விட்டது...

சாலையை கடக்கும் 
         சப்பாணி சிலபேர் -என்னை 
வலி காட்டும் கல்லாகவே 
          மாற்றி விட்டனர் !

என் இமை கூட இமைப்பதற்கு 
         ஆறு நொடி நேரம் 
அதிகம் எடுத்து கொள்கிறது !
ரத்த அணுக்களுக்கு கூட 
          சக்தி இல்லையாம் ! 
            - என் காத்திருப்பால் !

கையில் கடிப்பதற்கு 
    நகம் பாக்கியில்லை!
சில்லறை வாங்கா 
        சிலையென நிற்கிறேன்!

கதிரவன் கூட 
   காலை வாரிவிட்டான் !
அவன்கென்ன அவசரமோ 
      அவன் விடு சென்று விட்டான் !

இருள் கூட வந்து விட்டது !
    அவள் அருள் கிடைக்கவில்லை !
ஒரு வேலை அவள் மறந்து இருக்கலாம் !
நாளை பார்க்கலாம் ....
               காத்திருத்தல் கூட ஒரு சுகம் அல்லவே!


வாழ்வில் பிடித்த நிமிடங்கள்


தன் காதலியின் வரவுக்காக காத்திருந்த  நிமிடங்கள் தான்
சிலர் வாழ்வில் அடிக்கடி நினைவில் வந்து செல்லும்...
அப்படி வாழ்வில் வந்து செல்லும் சில நிமிடங்கள்....


ஒன்றும் புரியாத நிமிடத்தை
எதிர் நோக்கி காத்திருக்கும்
என்னை பார்த்து -நிமிராமல்
நீ நீக்கும் புன்னகையால் - என்னை
அறியாமல் நான் சிரித்த என்
வாழ்வின் ஆரம்ப நிமிடங்கள் !

சாலையோர மரங்கள் கூட - என்னை
சங்கடமாய் பார்த்து நிற்க ! - என்
கண் உன்னையே பார்த்து  நின்று
கருவளையம் கூட வலுவிழக்கும் !
தினமும்  தவறாமல் கடந்து சென்று
என் அரை ஜாடை பாடலினால் சிந்தும்
முத்து மலை புன்னகையால் -அந்த
உயிர் பறக்கும் சந்தோஷ நிமிடங்கள் !

உன் புன்னகையே போதுமடி - நான்
சிந்தும் கண்ணீரும் சிலையாகும் !
வண்ண கனவுகளால் வரைந்து வைத்த
உன் சொல்லாத ஆசையெல்லாம் - என்
முன்னால் ஓர சொல்லல் சொல்லி
சென்ற வார்த்தைகளால் உறைந்து
நின்ற உன்னத உயிர் நிமிடங்கள் !

பார்வையிலே படர்ந்து வரும்
நம் காதல் கொடியை - என்
கவிதையால் கால் கொடுக்க
சிந்தையை முன் நிறுத்தி -மனக்
கண்ணுக்குள் சிலை வடித்து
உன் சிரிப்பால் சிலேடை தரும்
என் சிந்தனை நிமிடங்கள் !

உனக்கே என்று நினைத்து வைத்த
வாழ்த்து அட்டை முதல் - என்
மனக்கோட்டை வரை -யாரும்
அறியாமல் உன் நினைவிற்காக
நான் பதுக்கும் நிமிடங்கள் !

உன் கண் பார்க்கும் ஒரு நிமிடம்
நீ என்னை பார்ப்பதில்லை - நீ
எனை பார்க்கும் அந்நேரம்
நான் கண்ட மகிழ்ச்சிகோர் எல்லை!
காதல் நலம் காண - நம்
கண்கள் பார்த்து பேசும் அந்த
சமரச நிமிடங்கள் !

உன் கையில் என் கை பதித்து
கன்னத்தில் முத்தமிட்டு - என்
வண்ண கனவுகளை உன் முன்னே
வர்ணம் குறையாமல் முழங்கிவிட
நான் காத்திருக்கும்
               அந்த சில நிமிடங்கள் ...!மனதில் வையடா !

வென்று விட்ட உயிர்களெல்லாம்
மாண்டு விட்டதடா !- அவை
கொண்டு வந்த பொருட்களெல்லாம்
உலகை ஆண்டு விட்டதடா !

சண்டை போட்டு கொண்டோரல்லாம்
மரித்து விட்டனரோ ?- அவர்கள்
கொண்டு வந்த மதங்கள் மட்டும்
நிலைத்து விட்டனவோ ?

நட்பும் சுற்றமும் விரிவடைந்து
சுற்றி விட்டனவோ ? - உன்னை விட்டு
உயிர் பிரிந்தால்  உன்னை சுற்றி அழுகவோ?

வற்றி போன குளங்கள் எல்லாம்
நிரம்பி விட்டனவோ ? - சுற்றம் எல்லாம்
ஓடி வந்து கட்டி கொண்டனவோ ?

செல்வ செழிப்போடு வாழத்தான்
பட்டம் பெற்றாயோ ?-இருந்தும்
உன் நெற்றி வரை பணமிருந்தும்
இந்த வேலை பட்டினியோ ?

கண்டு கேட்ட விசயமெல்லாம்
கணக்கில் இல்லையடா ! - நீ
ஓரிடத்தில் ஒதுங்கி நின்றால்
உயர்வு இல்லையடா !

கனவு கூட காண விடா
கெட்ட உலகமடா - நீ
விழித்து கொண்டே கனவு
கண்டால் வெற்றி உனதடா !

ஆட்டும் குளிரும் வாட்டவில்லை
நான் வசதி இல்லையடா !
விதி ஆட்டும் போதும் அடங்கவில்லை
நமக்கு வயது உள்ளதடா !

உறவு கணத்த போதும் இலக்கை
வெல்வோம் கலக்கம் இல்லையடா !

நம்மை பற்றி
காட்டும் பொது காட்டி கொள்வோம்
                         கனவு உள்ளதடா !