கல்லுக்குள் ஈரம்

           
பெண்ணே
நீதான் நந்தவன சோலையில்
அசைந்தாடும் சந்தன மரக்கொடியோ?
உன் இமை அசைந்தாலே
என் இதயம் துடி துடிக்குதடி!

உன் கரு விழிகள் இரண்டும்
கூரிய கத்தி முனைகள்
என் உடம்பில் ஏற்படவில்லை
காயம் - மனதில் ஏற்பட்டது
காயம் அல்ல!
இந்த கவிஞன் சொல்லும் காதல் !

இவனுக்கு உன் துடி துடிக்கும்
இதயம் கூட வேண்டாம்
உன் படபடக்கும் கரு விழிகள் போதும்!
மௌன மொழி பேசியே
என்னை பைத்தியமாக்கி விட்டாயே !
அப்போதாவது
உன்னால் எனக்கு இதையாவது
செய்ய முடிந்ததே !


0 Comments:

Post a Comment