மாமன்னர் கல்லூரி

           
காலை கல்லூரி பேருந்து
இடைத்தேர்தலின் பரபரப்பு!
புதுபாடலின் அலைஈர்ப்பு !
நுரைகடலின் அலையடிப்பு!
சங்கமம் ஆகும் சாகச நிகழ்ச்சி!

கல்லூரி நண்பர்கள்
சிந்தனையின் சின்னத்தம்பிகள்!
துன்பத்தின் கதவடைப்புகள்!
பில்கேட்ஸின் பினாமிகள்!
நல்ல சொற்பொழிவாளர்கள்!

கல்லூரி வகுப்பறை
வசந்தத்தின் இருப்பிடம்!
வல்லுனர்களின் பிறப்பிடம்!
வில்லங்கத்தின் விவாதக்கூடம்!
சில்வண்டுகளின் சிறைச்சாலை!

கல்லூரி மரத்தடிகள்
அதிகாலை அறிமுககூடம்!
கல்லூரியின் காலச்சுவடுகள்!
அலட்டல்களின் ஐ.நா சபை!
இடைவேளை இரங்கல்கூட்டங்கள்!
பகுதி நேர பிரிவு உபச்சாரம்!
ரயில் காதல்


வானத்திலிருந்து
இறங்கும்
என்பார்கள்-
இங்கே
ஏறுகிறது
ரயிலில் !
என் தேவதை!

 டிராபிக் ஜாம்
பஸ்சுக்குதானா?
பைத்தியம் போல்
யோசிக்கிறது
பாழாய்ப்போன
மனசு!

நிச்சயம்
அது
தொடர் வண்டிதான்!
உன்னை
நான்
பின்தொடரும்
வண்டி!

கொஞ்சம் கவனி!
 நீ கை
வைத்திருக்கும்
கை பிடிக்கு
முன்னால்
தொங்கி
கொண்டிருகிறது
என் மனசு!

மாற்ற
முடியாத விதி!
தகர
பெட்டிக்குள்
தங்கம்!

 அந்த
வெள்ளை
சட்டை காரனுக்கு
மட்டும்
எவ்வளவு
தைரியம் ?
நேரடியாய்
உன்னிடமே
கேட்டுவிட்டான்!-
பயணச்சீட்டு!

 அவள்
வருகையின் போது
ரயிலுக்காக
காத்திருக்கும்
மக்களைப்போல்
ஆர்ப்பரிக்கிறது
மனசு! - அவள்
விட்டு பிரிகையில்
ரயில் சென்றபின்
தனியாய் விடப்பட்ட
ரயில் நிலையம்போல்
வெறிச்சோடி கிடக்கிறது!

என்
வாழ்க்கையின்
ஏற்றமும்
இறக்கமும்
ஒரே இடத்தில்!
ரயில் நிலையம்!டாஸ்மாக்கும் டீ கடையும்


குளிருக்காகவும்
களிப்புக்க்காகவும்
ஆங்கிலேயனுக்கு!
 பசியை போக்கவும்
 உடல் வலி நீக்கவும்
அக்மார்க் தமிழனுக்கு!

அன்று
 டீ கடையில்
ஏறிய பேத வேதாளம்
டாஸ்மாக்கில்தான்
 கொஞ்சம் இறங்குகிறது!

 டாஸ்மாக்கில்
ஏறிய போதையோ
 டீ கடையில்தான்
 கொஞ்சம் முறிகிறது!

கோடி கோடியாய்
வருமானம்
டாஸ்மாக்கிற்கு!
தெருகோடி
ஒன்னு போதும்
டீ கடைக்கு!

பேப்பரும்
பெப்பரும்!
இரு அவைகளிலும்
அதிகம் ஒலிக்கப்படும்
காப்பிரைட் வார்த்தைகள் !

இன்றளவில்
இவைகள்தான்
தமிழனுக்கு
ஊக்க மருந்துகள்
காலையும்
மாலையும் !

'பெண் சுதந்திரம் '
'புதுமை பெண்கள்'!
இவர்களும்
இடம் பெறுகிறார்கள்
இரு அவைகளிலும் !

எங்கள்
நாட்டின் வளர்ச்சி
'குடி'மகன்கள்
கையில் !

எங்கள்
ஊரில் தினமும்
தண்ணீர் தட்டுபாடு !
கூட்டம்
அலைமோதுகிறது
       - டாஸ்மாக்கில் !

தமிழக
வரலாற்றின்
திருப்பங்கள்
இவை இரண்டும்!
அதனால்தான்
வீட்டுக்கொரு பசுமாடு
 ஊருக்கொரு டாஸ்மாக்!

 தீபாவளி செய்தி!
 70% குடிகாரர்கள்
 இளைஞர்கள்!
 கலாம் அய்யா
 தள்ளாடுகிறது
 நமது தூண்கள்!

 "பச்சை துரோகம்"!
 டீ கடை
 அரசியலை
வளர்த்தது!
 அரசியலோ
 டாஸ்மாக்கை
 வளர்க்கிறது!

"தமிழன் என்று சொல்லடா" !
      - உணர்ச்சி பெருக்குடன் ஒருவன்!
" தல.. எழுந்து நில்லு மொதல்ல"
      - அதட்டலுடன் இன்னொருவன்
டாஸ்மாக்கில்!
 தள்ளாடுகிறது தமிழகம்!

 நண்பா !
 தயவு செய்து
 மீண்டு விடு !
 இல்லையேல்
 நாளை
 டீ கடை , டாஸ்மாக்
சுவர்களில் உன்பெயர்
இருக்கும்! - பெயர்
கொண்ட நீ இருக்க மாட்டாய்!