மனதில் வையடா !

வென்று விட்ட உயிர்களெல்லாம்
மாண்டு விட்டதடா !- அவை
கொண்டு வந்த பொருட்களெல்லாம்
உலகை ஆண்டு விட்டதடா !

சண்டை போட்டு கொண்டோரல்லாம்
மரித்து விட்டனரோ ?- அவர்கள்
கொண்டு வந்த மதங்கள் மட்டும்
நிலைத்து விட்டனவோ ?

நட்பும் சுற்றமும் விரிவடைந்து
சுற்றி விட்டனவோ ? - உன்னை விட்டு
உயிர் பிரிந்தால்  உன்னை சுற்றி அழுகவோ?

வற்றி போன குளங்கள் எல்லாம்
நிரம்பி விட்டனவோ ? - சுற்றம் எல்லாம்
ஓடி வந்து கட்டி கொண்டனவோ ?

செல்வ செழிப்போடு வாழத்தான்
பட்டம் பெற்றாயோ ?-இருந்தும்
உன் நெற்றி வரை பணமிருந்தும்
இந்த வேலை பட்டினியோ ?

கண்டு கேட்ட விசயமெல்லாம்
கணக்கில் இல்லையடா ! - நீ
ஓரிடத்தில் ஒதுங்கி நின்றால்
உயர்வு இல்லையடா !

கனவு கூட காண விடா
கெட்ட உலகமடா - நீ
விழித்து கொண்டே கனவு
கண்டால் வெற்றி உனதடா !

ஆட்டும் குளிரும் வாட்டவில்லை
நான் வசதி இல்லையடா !
விதி ஆட்டும் போதும் அடங்கவில்லை
நமக்கு வயது உள்ளதடா !

உறவு கணத்த போதும் இலக்கை
வெல்வோம் கலக்கம் இல்லையடா !

நம்மை பற்றி
காட்டும் பொது காட்டி கொள்வோம்
                         கனவு உள்ளதடா !வாழ்க்கைப் படிகள்!

வாசல் என்ற ஒன்று உள்ளதே
வழக்கதிற்காக  அல்ல !- அங்கு
வாய்ப்பு ஒன்று உள்ளது என்பதற்காக !

வாய்ப்பு என்ற ஒன்று உள்ளதே
வாக்கியதிற்காக அல்ல ! -உன்
வளர்ச்சியின் நோக்கதிற்காக !

வளர்ச்சி என்ற ஒன்று உள்ளதே
உன் உயர்வை குறிக்க அல்ல !- உன்
நிலையை என்றும் உனக்கு உணர்த்த !

உயர்வு என்ற ஒன்று உள்ளதே
மற்றவர்களை மட்டபடுத்த அல்ல !

நீ என்றும் மற்றவர்களின்  நினைவில்
                 மறையாமல் நிற்க !