புத்தி

ஒரு நீண்ட நாளின் முடிவின் இரவினில் சரவணன் மல்லார்ந்து படுத்துக்கொண்டு, நேற்று வரை இருந்த கூரையின் தீ தின்றதின் பெரிய பகுதியில் நிலவை பார்த்தவாறு தனிமையில் கிடந்தான்.

எடுத்துக்கட்ட ஆகும் செலவை தோராயமாய் கணக்கிடும்போதே மனது கலவரமாகி குப்புற படதுக்கொண்டான். அப்டியே கண்னயர்ந்தவன் பக்கத்துக்கு வீடு தொலைக்காட்சி அலறியதில் தூக்கம் தொலைத்தான்.


வெறும் யூகங்களையும் வேற்று கனவுகளையும் கொண்டு ஒரு கூந்தலையும் புடுங்க முடியாது என்ற வறட்டு உண்மை மனதில் அதிர்ந்தபடியே அந்த நிமிடங்கள் மீள முடியாத கணங்களுக்குள் கரைந்து கொண்டிருந்தது.


உறக்கம் பிடிக்காமல் எழுந்து நடந்தவன் நாய்களும் கனரக வானங்களும் சுயத்தை திருப்ப, தான் நெடுஞ்சாலை வரை தேமே என்று நடந்து வந்திருப்பதி நினைத்து பெருமூச்செறிந்தான்.


இருளான பரிட்சயமற்ற பகுதியில் நெடுநேரம் நின்றுப்பதை விரும்பாமல் நடக்க எத்தனித்தவன் தெரு விளக்கின் ஒளியில் குளிர் படர்ந்த சாலையில் வளர்ந்தும் குட்டையாகவும் ஒழுங்கே இல்லாமல் இருக்கும் மரங்களின் விளையாடும் நிழல்களை பார்த்தவரே எதோ சோகத்தில் ஆழ்ந்தான்.


சில நிமிடங்களுக்கு பிறகு நிமிர்ந்து நடந்தவன் ,ஆள் அரவமற்ற இருளின்

சூனியத்தை ரசித்தவாறே சில அடி தூரத்தில் ஒருவன் ரத வெள்ளத்தில் கிடப்பது கண்டு எடுத்த அடியை நிறைவு செய்யாமல் பதட்டத்தில் சுற்றும் முற்றும் பார்த்தவாறு நின்றான்.

சரிந்து கிடந்தவனின் அருகில் செல்லவே பயந்தவன், நமக்கேன் வம்பு என்று

நடக்க எத்தனித்த போது அறுபட்ட கழுத்தில் ஜொலித்த தங்க சங்கிலி எண்ணத்தை மாற்றி இருத்தி வைத்தது.

மனதின் வார்த்தைகளின் தர்கங்களை உடைத்து, தன் நிலையை எண்ணிப்பார்த்தவனின் கைகள் கைக்குட்டையை தேடி பரபரத்தது. கொன்ற தடம் தெரியாமல் இருக்க, பெரும் வாகனங்களில் சிக்கி உடல் சிதைந்து போகட்டும் என இருட்டான பகுதியில் விட்டு சென்றிருக்கிறார்கள் என் எண்ணியவாறே அருகில் சென்றான்.


தனக்கு எப்போதும் பழக்கமில்லாத, அருவெறுப்பான செயலை செய்ய மனதை தயார்படுத்திக்கொண்டே சங்கிலியை எடுக்க குனிந்தவனுக்கு உடலில் அசைவு இருப்பது கண்டு வெலவெலத்துப்போனான்.


நொடி பொழுதில் நூறு சிந்தனைகள் வந்த போதும் , பிறவி புத்தி சாக கிடப்பவனை காப்பாற்ற உதவி தேடி உந்த செய்தது. அந்த நள்ளிரவு நேரத்தில் அவன் நிறுத்த முயற்சிசெய்த வாகனங்களின் வேகம் கூடியதே தவிர நிறுத்துவார் எவருமில்லை. போலியான மனிதநேய சமூகத்தை திட்டிகொண்டே சாலையை பார்ப்பதும் கீழே

கிடப்பவனை பார்ப்பதுமாய் அவரசர கதியில் திகைத்தான்.

சரிந்து கிடந்தவனை ஓரமாய் அமர செய்தால் கொட்டும் குருதி குறையும் என

கரம்பிடித்து தூக்கியவன் அதிர்ந்து நின்றான். முனங்கல் நின்றதை அறிந்து
ஒரு முறைக்கு பல முறைக்கு சோதித்து பார்த்த பின் அறிந்து கொண்டான் அவன் மூச்சையும் நிறுத்திவிட்டனென்று. இறப்பின் வாயில் நின்று தவித்து
கொண்டிருந்தவனுக்கு இதுதான் சரியான முடிவை இருக்கும் என்று மனதை
சமாதனப்படுதிக்கொன்டே கையில் தங்க சங்கிலியுடன் நடந்து இருட்டுக்குள்
மறைந்தான். (முற்றும்)

இந்த விஷ பரீட்சைக்கு துணை நின்ற தீபனுக்கு நன்றி.
காய்ச்சல் வழி நலம்

அறையின் ஒரத்தில்
கிடக்கும் போர்வைக்குள்
காய்ச்சல் உடலைத்தட்டி
கிடத்தி வைத்திருக்கிறது.

இளஞ்சுட்டு நீரில் அரை
முழு மாத்திரைகள்
எனக்கென்னவென்று 
கசப்போடு கரைந்துகொண்டிருக்கிறது.

நோவு வந்தால்தான் - என்
உடலே எனக்கு தெரியுமென்றால்
அது மாதத்திற்கு ஒரு முறை
வந்து தொலையட்டும் - அந்த
மருத்துவராவது நலமாய் இருக்கட்டும்!


நீர்க்குமிழி


எங்கும்
விட்டுச்செல்லவில்லை
அதற்க்கான
முகவரியை!
எப்படி கொண்டு
சேர்ப்பேன்
அது மறைந்த
செய்தியை!