வாசல் என்ற
ஒன்று உள்ளதே
வழக்கதிற்காக
அல்ல !- அங்கு
வாய்ப்பு
ஒன்று உள்ளது என்பதற்காக !
வாய்ப்பு என்ற
ஒன்று உள்ளதே
வாக்கியதிற்காக
அல்ல ! -உன்
வளர்ச்சியின்
நோக்கதிற்காக !
வளர்ச்சி என்ற
ஒன்று உள்ளதே
உன் உயர்வை
குறிக்க அல்ல !- உன்
நிலையை
என்றும் உனக்கு உணர்த்த !
உயர்வு என்ற
ஒன்று உள்ளதே
மற்றவர்களை
மட்டபடுத்த அல்ல !
நீ என்றும்
மற்றவர்களின் நினைவில்
மறையாமல் நிற்க !
0 Comments:
Post a Comment