கண் இமைகள் துடிப்பதில்லை ..!


காதலியை கண்டுவிட்டால்
கண் இமைகள் துடிப்பதில்லை !
காதலிக்க கற்றுக்கொண்டால்
கண் உறக்கம் வருவதில்லை !

மன்தின்மேல் மதிலேறி
என் மனதினுள்ளே குடியேறி
என் கண் இரண்டில் ஓவியமாய் ..!
சொல்லிரண்டில் சொக்க வைக்கும்
சொக்கும் விழி சொந்தகாரியை ! - என்

காதலியை கண்டுவிட்டால்
கண் இமைகள் துடிப்பதில்லை !
காதலிக்க கற்றுக்கொண்டால்
கண் உறக்கம் வருவதில்லை !

விழி மேல் இமை வைத்து
இமைக்குள் என் உயிர் வைத்து
கணம் ஒரு முறை மூடி திறக்கிறாய்
ஒவ்வொரு முறையும்
நான் இறந்து பிறக்கிறேன் !0 Comments:

Post a Comment