பெண்ணே...!
உவமைகள் பல
கொண்டு
என் உலகை
ஆட்கொண்டு
உன் உடமை
உயிர் வரைக்கும்
அளந்து
சொல்லும் கவிதை
---சித்தரிப்பு
அன்ன நடை
கொண்டு
பன்முக நகை
கண்டு
உன் அடி பாதம்
மெல்ல
மண் மீது
எடுத்து வைத்தல்
---
அணிவகுப்பு
மென்குழல் கை
கொண்டு
இதழ் விரி
மலர் கண்டு
விரல் மலர்
வாள் கொண்டு
செல்லமாய்
கிள்ளி எடுப்பது
---பாவ
மன்னிப்பு
மெல்லிய இதழ்
விரித்து
சொல்லும்
வார்த்தையெல்லாம்
வான் உயர்
தேவதையின்
உள் அக
உச்சரிப்பு
---மொழி
பெயர்ப்பு
சிற்பி இமை
திறந்து
முத்து விழி
கொண்டு
உன் உயிர்
சேர்த்து
என் உலகை
பார்பதனால்
நீ என்னை
காதலிக்கிறாய் !
---
கருத்துக்கணிப்பு
சில நேரம்
பார்க்கிறாய்
பார்த்ததும்
சிரிக்கிறாய்
என்னதான்
சொல்வாய் ...
உன்னையே
தொடரும்
---கண்காணிப்பு
உன்னை காண
நான்
மறக்காமல்
அவதரிப்பேன்
தலை சாய்த்து
பார்த்து விட்டு
உன் புது மலர்
இதழ்களில்
--- புன்னகைபூ
0 Comments:
Post a Comment