ஹாய் மா.... ஹௌ ஆர் யு....

அவளுக்கு அதிக ஆசைதான்!
     சுற்றத்தாரின் முணுமுனுப்பு!

தான் பெற்ற பிள்ளை
        வீணாக போகாமல்
மிகுதியாய் படித்து
        தகுதியுடன் வாழவைக்க
நினைக்கும் - அவளுக்கு
         அதிக ஆசைதான்!


அரை படி அரிசிக்கே
      வழி இல்லாத நிலையில்
அவள் பிள்ளையை ஆங்கில
      பள்ளியில் சேர்த்துவிட்டு
அரை பட்டினியோடு
      அவனுக்கு மிச்சம் வைத்து
பெருமிதத்துடன் காத்துகிடப்பாள்!

வீட்டிற்குள் நுழைந்த பிள்ளை
     ஹாய் மா... ஹௌ ஆர் யு...
என்று மழலை மொழியில் கேட்க
      வயிறு நிறைந்து நெஞ்சடைக்க
 அவனை நெஞ்சோடு அணைத்து  
         அவன் முகத்தை கண்ணீரால்
 கழிவிடுவாள்- எதுவும்
                புரியாத அன்னை !



0 Comments:

Post a Comment