இன்று வரை
தனியாய் - எனக்காய்
நான் வெற்றி பெற்றேன் இன்று
கை தூக்கி
சொல்ல கையில் எனக்கேதும்
கேடயம் ஏதும் இல்லை!
என்
பெற்றோருக்கு பிள்ளையாயிருந்து
சில வெற்றிகள் பெற்றிருக்கிறேன் !
என் படிப்பில்
ஆசிரியருக்கு மாணவனனாய்
சில வெற்றிகள் பெற்றிருக்கிறேன் !
நட்பின்
பங்காய் நானும்
சில வெற்றிகள் பெற்றிருக்கிறேன் !
ஆனால் நானாய்
- எனக்காய்
பெற்ற வெற்றிகள் ஏதும் இல்லை !
வெற்றி என்பது
என்ன?
- நான் நிர்ணயித்த இலக்கா?
பிறரால்
எனக்கு நிர்ணயிக்கபட்ட இலக்கா?
தேடி கொண்டலைகிறேன் பதிலை!
0 Comments:
Post a Comment