வெல்வோம் வா !

மனமே !
வெற்றியை நோக்கி
         பல முறை படை எடு !
ஒவ்வொரு முறையும் -ஒவ்வொரு
         பாதையில் செல்லாதே !
 புது பாதையை தவிர்த்து
        புது பாதிப்பை ஏற்படுத்து !

நீ கடக்க வேண்டியது
கடைசி படித்தான் என்பது அல்ல !
 அது முதல் படியாய் -இருந்தாலும்
        அதுவும் வெற்றிபடியே !
நீ செய்யும் வேலையில்
      சோம்பேறியாய் இரு ! - நிச்சயம்
நிதானமாய் இருப்பாய் !

நீ வெற்றி பெற வேண்டுமானால்
       தோல்வியை தவிர்த்து விடு !
நீ பதக்கம் பெற வேண்டுமானால்
        பயத்தை பயன்படுத்திவிடு !
நீ உன்னை அடிக்கடி
     மாற்றிக்கொள்ள நினைத்தாலே !
காலபோக்கில் தானாய் மாறிவிடும் !
  
நீ தோல்வியை துரத்தினால் போதும்
      வெற்றி உன் பின்னால் ஓடி வரும் !



0 Comments:

Post a Comment