டாஸ்மாக்கும் டீ கடையும்


குளிருக்காகவும்
களிப்புக்க்காகவும்
ஆங்கிலேயனுக்கு!
 பசியை போக்கவும்
 உடல் வலி நீக்கவும்
அக்மார்க் தமிழனுக்கு!

அன்று
 டீ கடையில்
ஏறிய பேத வேதாளம்
டாஸ்மாக்கில்தான்
 கொஞ்சம் இறங்குகிறது!

 டாஸ்மாக்கில்
ஏறிய போதையோ
 டீ கடையில்தான்
 கொஞ்சம் முறிகிறது!

கோடி கோடியாய்
வருமானம்
டாஸ்மாக்கிற்கு!
தெருகோடி
ஒன்னு போதும்
டீ கடைக்கு!

பேப்பரும்
பெப்பரும்!
இரு அவைகளிலும்
அதிகம் ஒலிக்கப்படும்
காப்பிரைட் வார்த்தைகள் !

இன்றளவில்
இவைகள்தான்
தமிழனுக்கு
ஊக்க மருந்துகள்
காலையும்
மாலையும் !

'பெண் சுதந்திரம் '
'புதுமை பெண்கள்'!
இவர்களும்
இடம் பெறுகிறார்கள்
இரு அவைகளிலும் !

எங்கள்
நாட்டின் வளர்ச்சி
'குடி'மகன்கள்
கையில் !

எங்கள்
ஊரில் தினமும்
தண்ணீர் தட்டுபாடு !
கூட்டம்
அலைமோதுகிறது
       - டாஸ்மாக்கில் !

தமிழக
வரலாற்றின்
திருப்பங்கள்
இவை இரண்டும்!
அதனால்தான்
வீட்டுக்கொரு பசுமாடு
 ஊருக்கொரு டாஸ்மாக்!

 தீபாவளி செய்தி!
 70% குடிகாரர்கள்
 இளைஞர்கள்!
 கலாம் அய்யா
 தள்ளாடுகிறது
 நமது தூண்கள்!

 "பச்சை துரோகம்"!
 டீ கடை
 அரசியலை
வளர்த்தது!
 அரசியலோ
 டாஸ்மாக்கை
 வளர்க்கிறது!

"தமிழன் என்று சொல்லடா" !
      - உணர்ச்சி பெருக்குடன் ஒருவன்!
" தல.. எழுந்து நில்லு மொதல்ல"
      - அதட்டலுடன் இன்னொருவன்
டாஸ்மாக்கில்!
 தள்ளாடுகிறது தமிழகம்!

 நண்பா !
 தயவு செய்து
 மீண்டு விடு !
 இல்லையேல்
 நாளை
 டீ கடை , டாஸ்மாக்
சுவர்களில் உன்பெயர்
இருக்கும்! - பெயர்
கொண்ட நீ இருக்க மாட்டாய்!



0 Comments:

Post a Comment