கணி(நீ) காதலி ...!

கணிபொறியின் பகுதிகளை கொண்டு ஒரு காதல் கவிதை
எழுதும் ஒரு முயற்சி..முடிந்த அளவு முயற்சித்தேன் .....
நீங்களே படியுங்கள் .... :)

மறைகாமல் சொல் பெண்ணே
            உன் மாதர் போர்டு  என்ன விலை ?
உன் கண் அசைந்தாலே
             கமெண்டாக மாறுகிறதாம்....!

 புதிதாய் ஏதும் புரோக்ராம்  எழுதினாயா?
               உன் ப்ரசெச்செர் கூட பேசுகிறதாம் ...!

மானிட்டரில் ஏதும் மரபணு மாற்றமா ?
           நல்ல கண்டிஷன் தான் என்றாலும்
நிமிடத்துக்கு ஒருமுறை மாறாமல்
           கண் அடிகிறதாமே உன்னை பார்த்து ...!

 என் கன்னங்கள் என்றும் ஏங்கும்
           உன் செல்லமான தட்டுதல்களை
 மொத்தமாய் குத்தகைக்கு எடுத்தனவோ?
           உன்னால் கீர்த்தி பெற்ற கீபோர்டுகள்!

F5 கீயை அழுத்தாமல் இருந்தாலும்
             உதவி என்று கேட்கிறாதாமே?
சுத்தமாய் புடுங்கி விடுவேன் 
          சத்தம் போட்டு சொல்லி வை அதனிடம்!

தயவுசெய்து மவுசுக்கு ஏதேனும்
               மருந்து கொடுத்து காப்பாற்று
 உன் கை பட்ட மயக்கத்தில்
              கண்டிஷன் இழந்து கிடக்கிறதாம் !

 கணினியே காதலிக்கும் பதுமை !
          இவள் யாரும் காணக்கிடைக்காத புதுமை !
 அவளின் கண்களில் பொங்கும் இளமை
           கணினிக்கும் காதல் ஏற்படும் புதுமை !3 Comments:


machi super da... love this !!


Post a Comment