உன் பொங்கல் ...!

காலையில் எழுந்தவுடன் 
    கட்டாயம் கடந்து விடுகிறேன் - உன்
கையால் போடப்பட்ட 
       கண்மணிக்கோலங்களை!


உன் வாசல் கோலங்களில்
 கலப்படம் இல்லாத கலர்பொடிகளோ?- இல்லை
உன் கைவிரல்கள் பட்டதும்
              நாணி சிவந்துவிட்டனவோ ?

பானைக்குள் என்ன
       உனக்கும் அரிசிக்கும்
  உறவுப்போரா ?- கடைசியில்
என்னை போலவே  அடிபநிந்திருக்குமே !

வெண் பொங்கல் என்று
       நீ தந்த பொங்கல் - மாறாய்
அதிகமாகவே இனிக்கிறது !
உன் கைபட்டவுடன்
        பொங்கல் வள மேம்பாடோ ?

பொங்கலோ........! பொங்கல்...... !
                              உன் கண்களே கண்கள் !



0 Comments:

Post a Comment