மானிட ரோபோக்கள்

உயிரை அழகாய் படைத்தவன் இறைவன் !
மானிட இயல்பை மாற்றிவிட்டான் மனிதன் !

சிந்தையில் சாதித்த மனித குலம் - ஆட்டு
மந்தை போல வாழும் மகா கேவலம் !

தட்டிவிடும் குச்சிக்கு தாவி ஆடும் குரங்கை போல
கட்டி ஆடும் காசுக்கு குதித்து ஓடும் குதிரை போல
சுயத்தை இழந்து விட்டான் மனிதன் !
சுகத்தை அடையும் வழியில் !

சட்டியில்  கொழம்பு வைத்து 
        வட்டியிலே சோறு வைத்து 
கட்டிலிலே படுத்த காலம்
          கரையேறி போச்சு !
கணிபொறி சுட்டியிலே  
          மனதை வைத்து 
பெட்டியிலே பணத்தை நிரப்ப 
           O.T யிலே ஓடும் காலம் 
சிட்டி வாழக்கை ஆச்சு !

மனிதன் முழுதாய் மாறிவிட்டன ! - அவன்
மனதை கழட்டி எங்கோ மாட்டிவிட்டான் !

உற்றார் இறந்தாலும் ஒரு சொட்டு
           கண்ணீர் விட நேரமில்லை !
பெற்றோராய் இருந்தாலும்
            உடனே வரும் தூரமில்லை !

கற்றவர்கள் என்று கூறி
     காசுக்கு விற்கப்படும்
கற்கால மனிதர்களின்
       கடைசி பிள்ளைகள் - இந்த
மானிட ரோபோக்கள் !

இவர்கள் புத்திசாலிகள்
            என்றழைக்கபடும் அடி முட்டாள்கள் !
குழந்தையின் சிரிப்பை ரசிக்க
            தெரியாத குற்றவாளிகள் !
இயற்கையின் வலிமை அறிய
            இயந்திர அடிமைகள் !
கூவும் குயிலை மறந்து திரியும்
       கிணற்று தவளைகள் !
வயல் வெளியை மறந்து விட்ட
      வசதி படைத்தவர்கள் !

நீங்கள் ....!
பாக்கள் கொண்டு கவி பாட வேண்டாம் ! - ரோட்டோர
பூக்களை கொஞ்சம் ரசித்து செல்லுங்கள் !
குயில் பாட்டை கேட்க காட்டுக்கு செல்ல வேண்டாம் !
குழந்தையின் சிரிப்பில் கொஞ்சம் மூழ்குங்கள் !
சுற்றமும் நட்பும் கூடி குலாவ வேண்டாம் !
பெற்றோரின் நலனயாவது கருத்தில் கொள்ளுங்கள் !

இருக்கும் பொழுதில் இனியாவது மாறிவிடு !
இருக்கும் உலகை இனி வருபவர்களுக்காவது மாற்றி கொடு !


1 Comments:


உமது வரிகள் ஒவ்வொன்றும் பட்டியிலிருந்து சிட்டிக்கு
சுழ்நிலையால் உந்தி செல்லப்பட்ட ஒவ்வொரு குடிமகனின் மனவலிகலை சொல்வதாய் உள்ளது...


Post a Comment