ஏற்றம்
இறைத்து
பட்ட பாட்டை
மறந்து
உழவர் உள்ளம்
கொணர்ந்து
மனதில்
மகிழ்ச்சி பொங்க
மக்கள்
பானையும் பொங்க
அக்கால தமிழர்
அனைவரும்
எக்காலமும்
வாழ்த்த - நாம்
உழவர்
வைத்த பொங்கல்
இந்த தை
பொங்கல் !
சிலிண்டர்
அடுப்பு வைத்து
சின்னஞ்சிறு பானை வைத்து
வண்ண வண்ண
கோலமிட்டு
புத்தாடை உடுத்தி - வரும்
எத்தடையும்
அகற்றி
எந்த தொல்லையும் இல்லாமல்
தொலைகாட்சியில்
முகம் பதித்து
நாயகர்கள் நயம் படிக்க
கோவலர்கள்
கரம் பிடிக்க -
பழைய தமிழன்
காணாப் பொங்கல்
இந்த கம்ப்யூட்டர் பொங்கல் !
0 Comments:
Post a Comment