அழகிய பொழுது
விடிந்து
காலை கதிரவன் எழுந்து
சேவலின் ஒலி
பிளந்து
கரிய இருள் அகன்று
கண் விழித்து
பார்கையில்
தை திருநாள் கையில் தவழ்கிறது !
ஊரெங்கும்
உறவு அலை
பொங்கல் கொண்டாட்ட நிலை !
வாசலெங்கும்
சாண நீர் தெளித்து
அரிசிமாக் கோலமிட்டு
பார்ப்பவர்
கண் அசர
வண்ணத்தை கலந்து உரச
நேரம் ஒன்பதை
தொட்டு பார்த்தது !
சொந்தம்
அனைத்தும்
சொக்கும் ஆடையணிந்து
பக்கத்தில்
உள்ள
கோவிலுக்கு சென்று
தங்கள் குலம்
விளங்க - வாழ்வு
முழுவதும் வளம் பொங்க
அனைவரும்
வணங்கி நிற்க !
முக்கல் உரச
அடுப்பு வைத்து
சுட்ட மண் பானை இட்டு
சர்க்கரை ஏலம்
சேர்த்து
அரிசியிட்டு பொங்கலிட்டு
இலையிட்டு
படையலிட்டு
அனைத்தையும் கலந்து வைத்து
பொங்கலை
அனைவருக்கும் ஊட்ட - வேறு
தேவையில்லை அன்பை காட்ட !
சொந்தங்கள்
சேர்ந்து வந்தால்
சந்தங்கள் வந்து பாடும்
தை திங்கள்
வந்துவிட்டால்
சொந்தங்கள் வந்து கூடும் !
0 Comments:
Post a Comment