அந்த இரண்டு வார்த்தைக்காக ...!

அன்று !
        உன்னிடம் சொல்ல நினைத்து
                  சொல்ல முடியாமற்போன
       இரண்டு வார்த்தைக்காக - என் விழி
                  தூங்காத இரவுகள் பல !

என் கையில் தவழ்கிறது
             தமிழனின் தை பொங்கல் !
இடைவிடாது முயற்சித்தால்
           இடைமறித்தாவது சொல்லிவிடலாம் !

பல நாள் முயற்சித்தும்
       பலன் ஏதும் இல்லை !
உன்னை கண்ட உடன்
       கண்கள் மட்டும் பேச -  வார்த்தை
கதவடைப்பு நடத்துகிறது !
        வாய் வழக்கு நிலுவையில் நிற்கிறது !

உன்னிடம் அதிகம் பேச
     வார்த்தையும் இல்லை - அதற்க்கான
வாய்ப்புகளும் அதிகம் இல்லை !- அதை
உன்னிடம் ஜாடையாக
             சொல்ல விரும்பினாலும் - அதற்கான
 சரக்கும் என்னிடம் இல்லை !

தை பொங்கலோ நுனி நாவில்
          இனித்திருக்க - கரும்புசாரோ
கடவாய் வரை தீராமல் இருக்க
    உன்னிடத்தில் அதை சொல்லும் வரை
என் இதயம் சுகமாய் துடிக்க போவதில்லை !

நீ முதலில் சொல்லலாம் என
          என்னை போல் நீயும் இருப்பாய்?- ஆதலால்
இனியும் நான் காலம் தாழ்த்த போவதில்லை !
         என் வாழ்வில் காலம் தந்த மாறுதலால் - இதோ
உனக்குரிய அந்த இரண்டு வார்த்தையுடன் !

ஒவ்வொரு மனிதனும் காலையில்
          புதிதாய் பிறக்கிரானாம் !
என் வாழ்கையும் புதிதாய்
     பிறக்கிறது அந்த வார்த்தைகளுடன் !
அந்த இரண்டு வார்த்தை ......!
                  இரண்டு வார்த்தை .....!
                             இரண்டு வார்த்தை ....!
                                         இரண்டு வார்த்தை !
                                                           -ஹாப்பி பொங்கல்-



0 Comments:

Post a Comment