என்
மனமென்னும் சோலையில்
மகிழ்ச்சியுடன் தொடங்கி
மலராத
மொட்டாய்
மானசீகமாய் தொடர்ந்து வரும்
என்
மாண்புமிகு காதலை
உன்னிடம் உவமையாய் கூற விரும்பினால் !
மனம்
என்னும் மண் எடுத்து
விழி என்னும் விதை எடுத்து
காதல்
இன்னும் சோலையில்
பூத்த சூரிய காந்தி பூ நான் !
நீ
எத்திசையெல்லாம் செல்கிறாயோ
அத்திசையெல்லாம் நித்தம் பூக்கின்ற
புத்தம்
புதிய சூரிய காந்தி பூ நான் !
0 Comments:
Post a Comment