ல்தகா சைஆ

மயிர் இழந்தால் உயிர் துறக்குமாம் கவரி மான்
               உன்னை பார்க்க என் உயிர் துடிக்கும்
                                           -ஆகவே நான் 'காதல் மான் '

 பாலும் நீரும் தனியாய் பிரிக்குமம் அன்னபறவை !
                   நாளும் பொழுதும் என் மனம் நினைப்பது
                                           -அனைத்தும் உன் உறவை !

 ஆண்புறா  இறந்தால் கல்தின்று இறக்குமாம் மாடப்புறா  !
               நீ என்னை வெறுத்தாலும்  என் காதல் சொல்லி இறப்பேன்
                                           -ஆகவே  நான் மனிதப்புறா!

 மழை வந்தால் தலை விரிதாடுமாம் தேசிய மயில்
    நீ வந்தால் என் அகம் மகிழ்ந்து ஆடும்
                                            நீ சொல்லிய பொய்யால்  !

 நிறம் வேறு என்றாலும்  குணத்தை சொன்னவுடன்
               குறிப்பை வருவது கானக்குயில் !
 குணம் வேறு என்றாலும் என் மனதுக்கவாது
               என்னை காண வருமா என் காதல் குயில் ¡


0 Comments:

Post a Comment