ஹாய் மா.... ஹௌ ஆர் யு....

அவளுக்கு அதிக ஆசைதான்!
     சுற்றத்தாரின் முணுமுனுப்பு!

தான் பெற்ற பிள்ளை
        வீணாக போகாமல்
மிகுதியாய் படித்து
        தகுதியுடன் வாழவைக்க
நினைக்கும் - அவளுக்கு
         அதிக ஆசைதான்!


அரை படி அரிசிக்கே
      வழி இல்லாத நிலையில்
அவள் பிள்ளையை ஆங்கில
      பள்ளியில் சேர்த்துவிட்டு
அரை பட்டினியோடு
      அவனுக்கு மிச்சம் வைத்து
பெருமிதத்துடன் காத்துகிடப்பாள்!

வீட்டிற்குள் நுழைந்த பிள்ளை
     ஹாய் மா... ஹௌ ஆர் யு...
என்று மழலை மொழியில் கேட்க
      வயிறு நிறைந்து நெஞ்சடைக்க
 அவனை நெஞ்சோடு அணைத்து  
         அவன் முகத்தை கண்ணீரால்
 கழிவிடுவாள்- எதுவும்
                புரியாத அன்னை !



சட்டம்

         
உரிமை மீறலுக்கு எல்லைகோடு
       நமக்கு நாமே வரைந்த ஏடு !
ஆசைக்கு அபாய எச்சரிக்கை !
      பெண்களின் பெருங்கவச உடை!
கயவர்களின் கைவிலங்கு !
 மொத்தத்தில்
     விதிகளின் தொகுப்பில் மனித உரிமை மாலை !

ஏழைக்கு ஒன்று !
ஏற்றம் உடையார்க்கு ஒன்று !
              - என்ற பாகுபாடு இல்லை
 தோற்றத்தை பார்த்ததும் - ஏடு
        மாறும் வேலை  இல்லவே இல்லை !
என்றெல்லாம் மாட்டிகொண்டது
     மலையேறிவிட்டது இன்று !
 நீதி தேவதையின் கண்ணை மட்டுமல்ல!
     வாயையும் சேர்த்தே கட்டிவிட்டினர்போலும்!

சட்டம் ஒரு இருட்டரயாம் !
       இருட்டறைக்குள் ஆயிரம் ஓட்டையாம்!
கொலை செய்தவன் எல்லாம் - பேட்டி
        கொடுத்து விடை பெறுகிறான் - தொலை காட்சியில் !
சோத்துக்கு திருடியவன் எல்லாம்
         அடைபடுகிறான் சிறையில் !

அண்ணல் எழுதி சட்டத்திற்கு
         வயதாகி விட்டது போலும் !
அவரின் விழுதுகள் - அவற்றை
       மாற்றி அமைத்தால் போதும் !

நீதி தேவதையின் தராசு தட்டுகள்
      நேராக்க பட வேண்டும் ! - தொற்று
நோய் போல தொடரும் ஏட்டு பழக்கமெல்லாம் 
நீதி முழக்கமிட ஓடி ஒழிய வேண்டும் !




பிறந்த நாள்

இந்நாள் மலர்ந்த மலரே !
      எந்நாளும் எந்தன் உயிரே !
உன்னாலும் முடியாது நிலவே !
     அவள் கண்கள் காட்டும் அழகே !
மண்ணாலும் மறையாத உறவே !
     கணம் கூட நீங்காத கனவே !

இது போல பல ஆண்டு
    நீ காண வேண்டும் !
உனக்காக தினம் கவிதை
        நான் எழுத வேண்டும் !