நிரம்பிய
கனவுகளால் - என்னால்
நிரப்ப முடியவில்லை என் வாழக்கையை!
விரும்பிய
இதயங்களால் - என்னால்
விரும்ப முடியவில்ல என் இதயத்தை !
விளங்கிய
வார்த்தைகளால் - என்னால்
விளக்க முடியவில்லை என் மனதின் பாரத்தை !
தெரிந்த
உண்மைகளால் - என்னால்
தெளிவாக்க முடியவில்லை என் உலகத்தை !
முழுதும்
அறிந்த இதயங்களால் - இன்றும்
அறிய முடியவில்லை என் மனதின் மௌனத்தை !
0 Comments:
Post a Comment