அலையாடும் கடல் மீது
ஓடி விளையாடும் ஓர் ஆசை !
பாடும்
குயிலோடு பறந்து
கவி பாடும் ஓர் ஆசை !
அடிக்கும்
காற்றோடு மிதந்து
சுற்றி வரும் ஓர் ஆசை !
பற்றி எரியும்
தீயில் வீழ்ந்து
குளிர் காயும் ஓர் ஆசை !
மழலை
மொழிக்குரலோடு நித்தம்
இசை கேட்கும் ஓர் ஆசை !
அத்தனையும்
சாத்தியமடி
நீ சொல்லும் ஒத்தை சொல்லில் !
0 Comments:
Post a Comment