கணி(நீ) காதலி ...!

கணிபொறியின் பகுதிகளை கொண்டு ஒரு காதல் கவிதை
எழுதும் ஒரு முயற்சி..முடிந்த அளவு முயற்சித்தேன் .....
நீங்களே படியுங்கள் .... :)

மறைகாமல் சொல் பெண்ணே
            உன் மாதர் போர்டு  என்ன விலை ?
உன் கண் அசைந்தாலே
             கமெண்டாக மாறுகிறதாம்....!

 புதிதாய் ஏதும் புரோக்ராம்  எழுதினாயா?
               உன் ப்ரசெச்செர் கூட பேசுகிறதாம் ...!

மானிட்டரில் ஏதும் மரபணு மாற்றமா ?
           நல்ல கண்டிஷன் தான் என்றாலும்
நிமிடத்துக்கு ஒருமுறை மாறாமல்
           கண் அடிகிறதாமே உன்னை பார்த்து ...!

 என் கன்னங்கள் என்றும் ஏங்கும்
           உன் செல்லமான தட்டுதல்களை
 மொத்தமாய் குத்தகைக்கு எடுத்தனவோ?
           உன்னால் கீர்த்தி பெற்ற கீபோர்டுகள்!

F5 கீயை அழுத்தாமல் இருந்தாலும்
             உதவி என்று கேட்கிறாதாமே?
சுத்தமாய் புடுங்கி விடுவேன் 
          சத்தம் போட்டு சொல்லி வை அதனிடம்!

தயவுசெய்து மவுசுக்கு ஏதேனும்
               மருந்து கொடுத்து காப்பாற்று
 உன் கை பட்ட மயக்கத்தில்
              கண்டிஷன் இழந்து கிடக்கிறதாம் !

 கணினியே காதலிக்கும் பதுமை !
          இவள் யாரும் காணக்கிடைக்காத புதுமை !
 அவளின் கண்களில் பொங்கும் இளமை
           கணினிக்கும் காதல் ஏற்படும் புதுமை !



என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் .....!


அழகிய பொழுது விடிந்து
            காலை கதிரவன் எழுந்து 
சேவலின் ஒலி பிளந்து 
          கரிய இருள் அகன்று 
கண் விழித்து பார்கையில்
          தை திருநாள் கையில் தவழ்கிறது !

ஊரெங்கும் உறவு அலை 
          பொங்கல் கொண்டாட்ட நிலை !
வாசலெங்கும் சாண நீர் தெளித்து 
    அரிசிமாக் கோலமிட்டு 
பார்ப்பவர் கண் அசர 
     வண்ணத்தை கலந்து உரச
நேரம் ஒன்பதை தொட்டு பார்த்தது !

சொந்தம் அனைத்தும் 
          சொக்கும் ஆடையணிந்து 
பக்கத்தில் உள்ள 
      கோவிலுக்கு சென்று 
தங்கள் குலம் விளங்க - வாழ்வு 
   முழுவதும் வளம் பொங்க 
அனைவரும் வணங்கி நிற்க !

முக்கல் உரச அடுப்பு வைத்து
        சுட்ட மண் பானை  இட்டு
சர்க்கரை ஏலம் சேர்த்து 
        அரிசியிட்டு பொங்கலிட்டு
இலையிட்டு படையலிட்டு 
       அனைத்தையும் கலந்து வைத்து
பொங்கலை அனைவருக்கும் ஊட்ட - வேறு
         தேவையில்லை அன்பை காட்ட !

சொந்தங்கள் சேர்ந்து வந்தால்
          சந்தங்கள் வந்து பாடும்
தை திங்கள் வந்துவிட்டால்
        சொந்தங்கள் வந்து கூடும் !



கம்ப்யூட்டர் பொங்கல்..!


ஏற்றம் இறைத்து
பட்ட பாட்டை மறந்து
உழவர் உள்ளம் கொணர்ந்து
மனதில் மகிழ்ச்சி பொங்க
மக்கள் பானையும் பொங்க
அக்கால தமிழர் அனைவரும்
எக்காலமும் வாழ்த்த - நாம்
 உழவர் வைத்த பொங்கல்
                       இந்த தை பொங்கல் !

சிலிண்டர்  அடுப்பு வைத்து
           சின்னஞ்சிறு பானை வைத்து
வண்ண வண்ண கோலமிட்டு
         புத்தாடை உடுத்தி - வரும்
 எத்தடையும் அகற்றி
        எந்த தொல்லையும் இல்லாமல்
தொலைகாட்சியில் முகம் பதித்து
           நாயகர்கள் நயம் படிக்க
கோவலர்கள் கரம் பிடிக்க -
பழைய தமிழன் காணாப் பொங்கல்
             இந்த  கம்ப்யூட்டர் பொங்கல் !