ஆயிரம் ஜன்னல் - ஒரு பார்வை


சாமியார்கள்,போதனைகள் எல்லாம் போலிகள் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கும் இந்த தருணத்தில் யோகா குருவாக வலம்வரும் சத்குரு அவகளின் பொன்மொழிகள் எழுத்தாளர் சுபா வின் கைவண்ணத்தில் ' ஆயிரம் ஜன்னல்' என்ற புத்தகமாக வெளிவந்ததை அனைவரும் அறிந்தது. அந்த புத்தகத்தில் எனக்கு பிடித்த பல விசயங்களை அல்லது பொன்மொழிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள அவா.


(முதல் மழை)
"மழை வந்தவுடன் வீட்டுக்குள் ஓடி விடுதலோ,குடை பிடித்தலோ தவறு. மழையை வரவேற்க கற்றுக்கொள்ள வேண்டும். வீட்டிற்க்கு வருகை தரும் ஒரு நண்பரை போல கொஞ்ச நேரம் அதனோடு நலம் விசாரிக்க வேண்டும். மழையோடு ஒன்றாய் கலக்கும் போது ஒரு நேசம் உண்டாவதை உணர்வீர்கள்.(அடுத்த தடவை மழை வந்த முயற்சி பண்ணுங்க)

(மன்னிப்பு)
"நான் மன்னித்துவிட்டேன் என்று பெருமை படுவதை விட , அதை நான் குற்றமாக கருதவில்லை என்பது தான் பெருமையான விசயம்."

(ஒரு முறை யோசி)
"நீ எதை செய்ய நினைக்கிறாயோ அதை இந்த உலகமே எதிர்த்தாலும் துணிந்து செய். ஆனால் ஒன்று, இந்த உலகமே நீ செய்ததை கேவலமாக பார்க்கலாம். ஆனால் நீ செய்ததை நினைத்து பிற்காலத்தில் நீயும் அவமானமாக உணரக்கூடும் என்றால் அதை செய்யதே."

(மலரின் மகத்துவம்)
"வாழும்வரை மலர்போல் இருக்க வேண்டும், பிறர் கவனித்தாலும் கவனிக்காமல் போனாலும் உதிரும் வரை இயல்பு மாறது. சிலர் உன்னை பாராட்டாமல் போனாலும் உன் இயல்பில் இருந்து மாறாதே."

(ஆழமாய் கவனி)
"எல்லாவற்றையும் கூர்ந்து கவனியுங்கள் , அதிக கவனம் செலுத்துவது புதிய ஆற்றலை கொடுக்கும்."

(கடலின் ரகசியம்)
"கடலை ரசிக்க கற்றுக்கொள்ளுங்கள் , அலை வந்து திரும்பும் போது உங்கள் மன அழுத்தங்களையும் அழைத்து செல்லும்."

(அதே கடவுள் புதிர்)
"கடவுளானாலும் , ஆவியான்லும் யாரோ சொல்வதை நம்புவது முட்டாள்தனம். அனுபவத்தில் இல்லாத காரணத்தால் அதை இல்லை என்று மறுப்பதும் முட்டாள்தனம்."

(பயணம்)
"அடிக்கடி பயணம் மேற்கொள்வதால் அனுபவமும் சிந்தனையும் அதிகரிக்கும்".

{சந்தர்ப்பவாதிகளுக்கு)
"அன்பினால் சேர்ந்து இயங்குவது மகத்தானது. தேவையினால் சேர்ந்து இயங்குவது அருவருப்பானது."

(நட்பு)
"நட்பு பகிர்தல் என்பது கொடுக்கல் வாங்கல் இல்லை , அது ஒருவர் மற்றொருவரில் கரைந்து போதல்."

(மனம் சார்ந்தது)
"இளமை மூப்பு எல்லாம் உடலுக்குத்தான். மனதுக்கு அல்ல. மனம் சுறுசுறுப்புடன் இருந்தால் நீங்கள் என்றும் பதினாறுதான்."

(கனவு)
"ஆசையும், அதை முடிக்கும் ஆற்றலும் இருந்தால் எதுவும் சாத்தியம்".

(நீங்கள் நீங்களாக)

"யாரையும் துதிக்கவும் வேண்டாம். மிதிக்கவும் வேண்டாம்."

(தலைமுறை சொத்து)
"உங்களின் அடுத்த தலைமுறைக்கு பிழைக்கும் வழியை தவிர வாழ்க்கை வாழும் முறையையும் விட்டு செல்ல வேண்டும்."

(உதவிக்கரம் போதும்)
"மற்றவர்களை புரிந்து கொள்ள முயல்வதை நிறுத்துங்கள். அவரது வளர்சிக்காக உதவுங்கள் அது போதும்."

(வாழ்க்கையின் சுவை)
"அன்பு,சந்தோசம்,பரவசம் காரணமாக உங்கள் கன்னங்கள் நனையாமல் இருந்தால் நீங்கள் இன்னும் வாழ்க்கையின் சுவையை அறியவில்லை என்று அர்த்தம்."

(கொண்டாட்டங்கள் முக்கியம்)
"வாழ்க்கையில் எதயோ எட்டிபிடிக்க வேகத்தை கூட்டிக்கொண்டே செல்வதால் வாழ்க்கையை தொலைத்துவிடும் அபாயம் உள்ளது. அவ்வப்போது பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபடுங்கள்"

(குற்றவாளிக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?)
"இருவரும் சந்தோசத்தை தேடித்தான் செல்கிறீர்கள். ஆனால் விதிமுறைகள் மீறினால் என்ன ஆகும் என்று உங்களுக்கு தெரிந்திருக்கிறது. பிடிக்காவிட்டாலும் வரிசையில் நிற்க நீங்கள் தயார். அவர்கள் தயாராக இல்லை."

(வாழக்கை மன்னிக்கும் விதம்)
"வாழ்க்கை எல்லா நேரத்திலும் நம்மை பொறுத்துக்கொள்ளது. அது மன்னிக்க மறுத்துவிடும் நேரங்களும் உண்டு என்பதை மறக்காதீர்கள்."

(ஒழுக்கம் பற்றியது)
"ஒழுக்கம் என்பது நிபந்தனைகளால் திணிக்கப்படக்கூடாது. அது அன்பினாலும் பொறுமையாலும் உருவாக்கப்பட வேண்டும்."

(தற்கொலை பற்றியது)
"தற்கொலை முயற்சிக்கு பெரிய அளவில் துணிச்சல் தேவை இல்லை. அபரிமிதமான முட்டாள்தனம் போதுமானது."

(Time Management பற்றி பேசுவோர்களுக்கு)
"நீங்கள் நிர்வாகிக்க வேண்டியது நேரத்தை அல்ல. உங்களை."

(ஜோசியத்தை நம்பலாமா??)
"ஆருடம்,ஜோசியம் என்பது வானிலை அறிக்கை போன்றது. மழை பெய்யும் என்று சொல்லட்டும் ,நான் நனைவேன் என்று எப்படி சொல்ல முடியும்? - நனைவதா வேண்டாமா என்பதை முடிவு செய்வது என் கையில் அல்லவா இருக்கிறது."


அந்த புத்தகத்தில் மூன்று அழகான தத்துவங்களையும் மேற்கோள் காட்டி இருந்தார்.
ஒன்று:
"எல்லாவற்றையும் முதல் தடவை பார்ப்பது போல் கவனி" - கவிஞர் எலியட்
இரண்டு:
"ஒவ்வொரு கணத்திலும் டிக்.. டிக்.. என்று கரைந்து கொண்டிருப்பது நேரமல்ல. உங்கள் வாழ்க்கை."
மூன்று:
"எல்லா விடைகளையும் அறிந்து விட்டதாக நான் நினைத்த நேரம் கேள்விகளே மாறிபோய் இருந்தன."
0 Comments:

Post a Comment