நீதானே என் ....

 நீ என்னை
கடக்கும்
தருணங்களில்
அனிச்சையாய் சில
அதிசயங்கள்
அரங்கேறுகிறது!

என் ஆழ்ந்த
சிந்தனையையும்  மீறி
மூளையிடம் ஆலோசனை
கேட்காமலே என் தலை
படக்கென திரும்பி
பார்க்கிறது உன்னை!

அதிக மன அழுத்தமே
ஆயினும் - உன் முகம்
பார்க்கும் சில நிமிடங்கள்
இதழ்கள் புன்னகை
பூக்கின்றன - புத்தன்
கண்டறியாத விடயம்!

என் கண்களுக்கும்
மட்டும் யாராவது
கணக்கு வாத்தி
வேண்டும் ! - என்
விழி தவிக்கும்
விகிதம் பார்த்து சொல்ல!

நீ கன்னங்களில்
கை வைத்து - எதையோ
கண்டறியும் காட்சி !
எனக்கு எதோ ஆங்கில
படம் பார்ப்பது போல்
புது விதமாய் தெரிகிறது!
ஏனென்றால்
என்ன என்று புரியாமலே
அதையும் நான்
ரசிக்கிறேன் அல்லவா?

சிரிப்பும் முறைப்பும்
பாவனையில் வெவ்வேறு
அழகு! - அது
இரண்டையும் ஒன்று சேர்த்து
ஓரமாய் பார்ப்பாயே உன்
  பேரழகில் ஓரழகு!

மயில் கிறங்கும் உன் குழல் அழகு! - என்
மனம் கிறங்கும் உன் விழி அழகு!
வழி தொடரும் உன் நிழல் அழகு - என்
வழி எங்கும் உன் நினைவழகு!
1 Comments:

Post a Comment