நான் மனிதன் அல்ல..!


வாலில்லை! மனிதன்தான்! பிறந்தேன்!
தொட்டில் ஆடும் பாட்டெல்லாம் கடந்தேன்!
குட்டி நடைபோட கட்டைவண்டி பிடித்தேன்!
சிரித்து விளையாட நேசமுகம் பிரித்தேன் !

வீசி விளையாட வீரமாய் சிரித்தேன் !
தூசி நிலத்தில் தூரிகையாய் நடந்தேன்!
காசு கைகாட்ட கல்விகூட பயின்றேன் !
எதோ விதி மாட்ட வேலையிலும் சேர்ந்தேன்!

நாளை நிஜமென்று நடந்தேன்!
நாளும் கனவொன்று கண்டேன்!
ஓடும் நதிபோல அலைந்தேன் !
ஓட்டம் முடியாது உணர்ந்தேன்!

நேரம் கடிகாரம் மறந்தேன் !
 பணமே குறியென்று கிடந்தேன் !
நேசம்- மோசம் நேரமென கடந்தேன்!
வாழ்க்கை புதிர் கண்டு சிரித்தேன்!

கண்முன் ஓடும் காட்சியெல்லாம் அழைத்தேன் !
என் வரியில் ஓடி விளையாட பணித்தேன் !
காக்கையும் குயிலென்று விளித்தேன்!
சிறு காகிதத்தில் சிறகுகளை விரித்தேன்!
உலகை சுற்றி ஒரு நொடியில் பறப்பேன் !

சிறு வரியில் சிலுவையையும் சுமப்பேன்!
வார்த்தைகளால் வாழ்க்கையே அளப்பேன் !
பார்ப்பவர்கள் யாரேனும் கேளிசெய்தல்
நான் மனிதனல்ல ... கவிஞன் என சிரிப்பேன்!!




0 Comments:

Post a Comment