சல்லியர்


அந்த மந்தமான
மழை நாளில்
அரசு கழிவறைக்கு
அருகில் அனாதையாய்
ஒரு சடலம்!
மிகவும் பழக்கப்பட்ட
முகம்தான் என்றாலும்
முழுதாய் அறிந்ததில்லை
அவரின் சுயசரிதை!

அக்கம் பக்கத்தில்
அரசல் புரசலாய்
கேள்விபட்டதில்
மணமும் முடிக்கவில்லை
பின்னால் பேர்சொல்ல
உறவும் இல்லை!

குருதி கொதித்தபொது
குதித்தோடிய இந்த ஆறு!
நரைத்து ஒதுங்கும்போது
கலப்பதற்கு இடமுமில்லை!
இனிக்கும் போது
இழுத்துக்கொண்ட 
இவ்வுலகம்!
நிலைகுத்தி
நின்ற போது
கொடுத்த இடம்
கழிவறைதான்!

கதறி அழ
கட்டியவளும் இல்லை !
கொள்ளி வைக்க
பிள்ளையும் இல்லை!
சாவுக்கான
சத்தமே இல்லை!
ஊரை கடக்கிறது
சல்லியர் சடலம்!
பங்காளிகள் நால்வர்
உதவியுடன்!

பெயர் சொல்லத்தான்
பிள்ளை இல்லை என்றால்!
இவர் பெயர் கூட
சல்லியர் இல்லையாம் -
பட்டபெயர்தானம்!
கால்காசு பெறாதவனையும்
கதறி வழியனுப்பும்
என்மக்கள்
சாதாரணமாய்
சொல்லிக்கொண்டு
கடந்து செல்கிறார்கள்
"சல்லியர் செத்துட்டாராம்"!


0 Comments:

Post a Comment