ஏழைச் சிறுவன்
வாழ்வை ஒளியாக்க
சின்ன
ஒளியில்
சிமினி விளக்கு.
-----*-----
கவனம் தேவை
கன்னிவெடிகள்...
லேடிஸ்
ஹாஸ்டல்!
-----*-------
நண்பன்
என்பவன்
நாணயமானவன்!
நாயர் டீ
கடையில்!
-------*-------
காகித பூ கூட
காய் காய்க்கும்!
காற்றுக்கும்
கனவிருக்கும்!
அதுக்கும் அது
.. வந்தால்!
--------*---------
வாழும்
பொது
திட்டம்
தீட்டி
கழிக்க
வேண்டும் பொழுதை!
இல்லையேல்
கடமைகள்
மீறி
இருக்கும்
உன்
வயதை!
------------*--------------
என்னவள்
பேசியே
பல
நாட்கள் ஆகிவிட்டது!
மவுன
விரதமாம்
என்னிடம்
மட்டும்!
------------*-------------
வருந்தாத
வாழ்க்கை
வரையறுக்கப்படுவதில்லை!
வரும்போது
வாழ்க்கை
வரையறுக்கப்பட்டதில்லை!
-------------*---------------
ஜோடிகள்
என்றால்
எங்களைப்போல்
இருக்கணும்!
செருப்புகள்!
-----------*-------------
பிறந்த
இடத்தில்
இருந்த பெருமை
புகுந்த
இடத்தில் இல்லை!
பெண்ணுக்கு
மட்டுமல்ல
பேட்டா
செருப்புக்கும்தான்!
----------------*---------------
உறக்கம் கூட
விற்பனைக்கு!
நைட் ஷிப்ட்!
-------------*------------
இவனக்கு அவனே
தேவல -
மக்கள் !
இனி
எங்களுக்கு
எவனுமே
தேவையில்லை -
ஆட்சியாளர்கள்
!
----------*----------
கருப்பு பணம்
கொஞ்சம் ஒ(ழி)ளிக்கப்பட்டுவிட்டது!
சுவிஸ்
பாங்கிலிருந்து
வேறு
இடத்திற்கு!
------------*------------
பணத்தை
துரத்தியவர்கள்
ஒரு
நேரத்தில்
பணத்தால்
துரத்தப்படுகிறார்கள்!
- 2G
-------------*------------
jodi arumai... anaiththum pidiththirukkirathu..vaalththukkal