பண வரவுகள்(உறவுகள்)


       விதியே!
       மானிட வாழ்க்கையென்ன
            மடுவோ ?  குளமோ ? - பண
      மழை கொட்டும் போதெல்லாம்
          உறவுகள் ஒட்டிகொள்கின்றன!
       வற்றி அடங்கும் போதெல்லாம்
           சுத்தமாய் ஒதுங்கி போகின்றன!
       கட்டு உள்ளவரைதான்
           கண்டுகொள்ளும் இந்த உறவுகளோ?
       உறவுகள் சுட்டுவிடும் போதெல்லாம்
            எனக்குள் குட்டி கேட்கும்
       இதுதான்  என் கேள்வி !



ஓய்வா?


நண்பா !
      ஓடிகொண்டே இரு !- நீயும்
கடிகார முட்களும் ஒன்று !
       உன் ஓட்டத்தில் ஓய்வு
கொள்ள நினைத்தால்
       மண்டியிட்டு ஒத்துகொள்!
- நான் மரணமடைகிறேன் என்று ! 



ஒத்தை சொல்லலே ..!

  அலையாடும் கடல் மீது
         ஓடி விளையாடும் ஓர் ஆசை !
பாடும் குயிலோடு பறந்து 
        கவி பாடும் ஓர் ஆசை !
அடிக்கும் காற்றோடு மிதந்து 
        சுற்றி வரும் ஓர் ஆசை !
பற்றி எரியும் தீயில் வீழ்ந்து 
      குளிர் காயும் ஓர் ஆசை !
மழலை மொழிக்குரலோடு  நித்தம்
      இசை கேட்கும் ஓர் ஆசை !

அத்தனையும் சாத்தியமடி 
      நீ சொல்லும் ஒத்தை சொல்லில் !


முடிந்ததால் முடியாதது ...!

நிரம்பிய கனவுகளால் - என்னால்
      நிரப்ப முடியவில்லை என் வாழக்கையை!

விரும்பிய இதயங்களால் - என்னால்
     விரும்ப முடியவில்ல  என் இதயத்தை !

விளங்கிய வார்த்தைகளால் - என்னால்
        விளக்க முடியவில்லை என் மனதின் பாரத்தை !

 தெரிந்த உண்மைகளால் - என்னால்
           தெளிவாக்க முடியவில்லை என் உலகத்தை !

முழுதும் அறிந்த இதயங்களால் - இன்றும்
          அறிய முடியவில்லை என் மனதின் மௌனத்தை !