அவன் - அவள் - அது


நிறங்களில் அது பிடிக்கும்
இது பிடிக்கும் என்ற
பாகுபாடெல்லாம்
அவனுக்கில்லை
அவளுக்கு பிடித்த நிறம்
ஆரஞ்சு என்பதை அறியும் வரை!

தெருக்கூத்துகளில்கூட
அவ்வளவாய் ஆர்வமில்லை!
வியப்பில் விரிந்து சுருங்கும்
அவளின் விழிகள்
கள்ளபார்வைகள் கொண்டு
அவன் கழுத்தை நெரிக்கும் வரை!

காதலில்கூட  தர்த்திதான்
கற்றுக்கொடுத்து கரை
சேர்த்தவள் அவள்
மணிக்கணக்கில் மரம்போல்
நிற்பவன் அவன்
நொடிக்குள் ஆச்சர்யங்களை
அள்ளித்தெளிப்பவள் அவள்!

ஆறுதல் வார்ர்தைகள்
இரவு நிறையும் கனவுகள்
தனியாய் சிரிக்கும் பாடல்கள்
ஜாடை மாடை பேச்சுக்கள்
தேடி திரியும் அனுபவங்கள்
சின்ன சின்ன ஊடல்கள்
சிறுபிள்ளை சாடல்கள்
என சகலத்தையும்
தொடங்கி வைத்தவள் அவள்!
தொலைந்து போனது அவன்!
அதுவும் தான்!


0 Comments:

Post a Comment