ஐந்து ருபாய்
சில்லறைக்காக
நடத்துனரின்
அர்ச்சனையோடு
அடுத்த
ஸ்டாப்பில்
இறங்கி
நிற்கிறேன்
கையில் காந்தி
நோட்டோடு
காந்தி
ரோட்டில்!
முகம் இறுகி
கண்கள் சிவந்து
அடுத்த பஸ்
பார்த்து நிற்க
பின்புறம் எதோ
பாவனையில் கை
அசைய
திரும்பிப்பர்கிறேன்
! -
ஐந்து நொடியில்
ஐந்து
வருடங்களை
மனம் அலசி
பார்க்கிறது !
நினைவு
குதிரையில்
யாரோ ஒருத்தி
பயணம்
செய்கிறாள் !
ஒடிசலான உருவம்
ஒல்லியான
கன்னம்
வெட்டி
நடக்கும் நடை!
பிடிபட்டது
பேதை
அவள்தான் இவள்
!
உப்பிய கன்னம்
சற்றே பெருத்த
உடல்
புடவையில் அவள்
புடவையின்
நுனியை
பிடித்தவாறு
அவள் மகள் !
அசட்டு
சிரிப்புடன்
அவளை
அடைகிறேன்!
சிறிய
இடைவெளியில்
நலம்
விசாரிப்புகள் !
அளந்த
வார்த்தைகள்
வார்த்தையின்
நடுநடுவே
செயற்கையாய்
சிரிப்புகள்!
இங்கிதமறியா
பேருந்தொன்று
அவள் பயணத்தை
நீட்டி சென்றது!
எனக்கான
பேருந்தின்
பத்து
நிமிட இடைவெளி
பல வருட
நினைவுகளை
வாரி
இரைக்கிறது ! -
பேருந்து
இரைச்சலில்
மன பிம்பங்கள்
அகல
ஜன்னலோர
இருக்கையில்
சாய்ந்து
கிடக்கிறேன்-
மனதில் மாறி
மாறி ஒலிக்கிறது!
அவளின் அன்றய
குழந்தை சிரிப்பும்
இன்றைய அவள்
குழந்தையின் சிரிப்பும்!
அவ கொடுத்து வெச்சவ... 10 நிமிசத்துல escape ஆகிட்டா....