"எங்க மச்சி போய்டபோறோம்"- என்று
நண்பனின் தோளைதட்டி
ஆறுதல் சொன்னாலும் -
கையை எடுக்காமலே
நிற்கிறேன் எங்கே
இதுதான் கடைசி
பிடியாய் இருக்குமோ
என்ற பயத்தில்!
பேசியே தினமும்
எங்களை கொல்லும்
எங்க பய மொக்க!
பேசாமல் எங்களை
கொல்கிறான் மௌனம்
என்னும் ஆயுதத்தால்!
பரம எதிரிகளாய்
பார்க்கபட்ட ஆசிரியர்கள்
எல்லாம் பாதிரியார்களாய்
தெரிகிறார்கள் - என்னுள்
நான் பாவியாய்
உணரப்பட்ட தருணத்தில்!
கல்லூரி நாட்களில்
ஆர்பரிக்கும் அலையாய்
நண்பர்களின் அரவணைப்பில்
கரையேறிய நான்!
கடைசி நாளில்
தனி தீவில்
விடப்பட்டதாய் உணர்ந்தேன்
தோளோடு இருந்த
என் தோழனின் கைகள் உயர்ந்து பை
சொன்னபோது!
கல்லூரி
கடைசி நாளை
நினைக்கும்போதெல்லாம்
ஒரு கணம் வலிக்கிறது!
"இருக்காத பின்னே"
நண்பர்கள் பக்கமிருந்தும்
சிரிக்க மறந்த நாள் அல்லவா!
கல்லூரி நாட்களின்
சுக துக்கங்கள்
எல்லாம் கடைசியாய்
எடுக்கப்பட்ட
புகைபடத்தில்
ஒளிக்கபட்டிருகிறது!
ஒவ்வொரு முறையும்
என் கண்ணீர்
அதை கண்டுபிடித்துவிடுகிறது!
என் ஆட்டோகிராப்
நோட்டை என்றும்
சாய்த்து வைத்ததில்லை!
நண்பர்களின்
கண்ணீர் துளிகள்
சிந்திவிடும் என்பதற்காக!
நானும்
மண்ணாசை பிடித்தவன்தான்
இப்போது உணர்கிறேன்!
அந்த
கல்லூரி வகுப்பறையில்
எனக்கும்
ஒரு பங்கு உண்டு !
இன்றும்
கல்லூரி சம்பந்தப்பட்ட
படங்களை பார்க்கும்போது
நமது கல்லூரி நாட்களும்
படமாய் பதிவு செய்திருந்தால்
நன்றாய் இருந்திருக்குமே?
என்று மடத்தனமாய்
மனம் கவலைகொள்கிறது!