விடிகாலையில்
உன்னை காண வந்தேன் !
காத்திருந்தே
...
சலிப்படைந்து
- என்
நிழல் கூட
இளைப்பாற
சென்று விட்டது !
நான் சாய்ந்து
நின்றிருந்த
மரம் கூட
முணுமுணுத்துக்
கொண்டே
இலைகளை
என்மேல் வாரி
இறைக்கிறது!
நான்
இருந்தும் பயமில்லை !
காதலனை
அழைக்கிறது கூவும் குயில்!
பார்த்துக்கொண்டே
இருக்கும் வரை ஒன்றுமில்லை !
படுத்து
உறங்க
முயற்சித்தால் முடியவில்லை !
- அவளது
கண்களால் ..
நகம்
கடித்துக்கொண்டே
உடலில் நயம்
இல்லாமல்
சிரித்துக் கொண்டே
இருக்கிறேன் !
நான் பார்த்து
கொண்டிருந்த
சாலை கூட பாம்பு போல
நெகிழ தொடங்கி
விட்டது...
சாலையை
கடக்கும்
சப்பாணி சிலபேர் -என்னை
வலி காட்டும்
கல்லாகவே
மாற்றி விட்டனர் !
என் இமை கூட இமைப்பதற்கு
ஆறு நொடி நேரம்
அதிகம்
எடுத்து கொள்கிறது !
ரத்த
அணுக்களுக்கு கூட
சக்தி இல்லையாம் !
- என் காத்திருப்பால் !
கையில்
கடிப்பதற்கு
நகம் பாக்கியில்லை!
சில்லறை
வாங்கா
சிலையென நிற்கிறேன்!
கதிரவன்
கூட
காலை வாரிவிட்டான் !
அவன்கென்ன
அவசரமோ
அவன் விடு சென்று விட்டான் !
இருள் கூட
வந்து விட்டது !
அவள் அருள் கிடைக்கவில்லை !
ஒரு வேலை அவள்
மறந்து இருக்கலாம் !
நாளை
பார்க்கலாம் ....
காத்திருத்தல் கூட ஒரு சுகம் அல்லவே!
யார் அவள்?