வாழ்வில் பிடித்த நிமிடங்கள்


தன் காதலியின் வரவுக்காக காத்திருந்த  நிமிடங்கள் தான்
சிலர் வாழ்வில் அடிக்கடி நினைவில் வந்து செல்லும்...
அப்படி வாழ்வில் வந்து செல்லும் சில நிமிடங்கள்....


ஒன்றும் புரியாத நிமிடத்தை
எதிர் நோக்கி காத்திருக்கும்
என்னை பார்த்து -நிமிராமல்
நீ நீக்கும் புன்னகையால் - என்னை
அறியாமல் நான் சிரித்த என்
வாழ்வின் ஆரம்ப நிமிடங்கள் !

சாலையோர மரங்கள் கூட - என்னை
சங்கடமாய் பார்த்து நிற்க ! - என்
கண் உன்னையே பார்த்து  நின்று
கருவளையம் கூட வலுவிழக்கும் !
தினமும்  தவறாமல் கடந்து சென்று
என் அரை ஜாடை பாடலினால் சிந்தும்
முத்து மலை புன்னகையால் -அந்த
உயிர் பறக்கும் சந்தோஷ நிமிடங்கள் !

உன் புன்னகையே போதுமடி - நான்
சிந்தும் கண்ணீரும் சிலையாகும் !
வண்ண கனவுகளால் வரைந்து வைத்த
உன் சொல்லாத ஆசையெல்லாம் - என்
முன்னால் ஓர சொல்லல் சொல்லி
சென்ற வார்த்தைகளால் உறைந்து
நின்ற உன்னத உயிர் நிமிடங்கள் !

பார்வையிலே படர்ந்து வரும்
நம் காதல் கொடியை - என்
கவிதையால் கால் கொடுக்க
சிந்தையை முன் நிறுத்தி -மனக்
கண்ணுக்குள் சிலை வடித்து
உன் சிரிப்பால் சிலேடை தரும்
என் சிந்தனை நிமிடங்கள் !

உனக்கே என்று நினைத்து வைத்த
வாழ்த்து அட்டை முதல் - என்
மனக்கோட்டை வரை -யாரும்
அறியாமல் உன் நினைவிற்காக
நான் பதுக்கும் நிமிடங்கள் !

உன் கண் பார்க்கும் ஒரு நிமிடம்
நீ என்னை பார்ப்பதில்லை - நீ
எனை பார்க்கும் அந்நேரம்
நான் கண்ட மகிழ்ச்சிகோர் எல்லை!
காதல் நலம் காண - நம்
கண்கள் பார்த்து பேசும் அந்த
சமரச நிமிடங்கள் !

உன் கையில் என் கை பதித்து
கன்னத்தில் முத்தமிட்டு - என்
வண்ண கனவுகளை உன் முன்னே
வர்ணம் குறையாமல் முழங்கிவிட
நான் காத்திருக்கும்
               அந்த சில நிமிடங்கள் ...!1 Comments:


முத்தம் கிடைத்ததா


Post a Comment