உயிரை அழகாய்
படைத்தவன் இறைவன் !
மானிட இயல்பை
மாற்றிவிட்டான் மனிதன் !
சிந்தையில்
சாதித்த மனித குலம் - ஆட்டு
மந்தை போல
வாழும் மகா கேவலம் !
தட்டிவிடும்
குச்சிக்கு தாவி ஆடும் குரங்கை போல
கட்டி ஆடும்
காசுக்கு குதித்து ஓடும் குதிரை போல
சுயத்தை
இழந்து விட்டான் மனிதன் !
சுகத்தை
அடையும் வழியில் !
சட்டியில்
கொழம்பு வைத்து
வட்டியிலே சோறு வைத்து
கட்டிலிலே
படுத்த காலம்
கரையேறி போச்சு !
கணிபொறி
சுட்டியிலே
மனதை வைத்து
பெட்டியிலே
பணத்தை நிரப்ப
O.T யிலே ஓடும் காலம்
சிட்டி
வாழக்கை ஆச்சு !
மனிதன்
முழுதாய் மாறிவிட்டன ! - அவன்
மனதை கழட்டி
எங்கோ மாட்டிவிட்டான் !
உற்றார்
இறந்தாலும் ஒரு சொட்டு
கண்ணீர் விட நேரமில்லை !
பெற்றோராய்
இருந்தாலும்
உடனே வரும் தூரமில்லை !
கற்றவர்கள்
என்று கூறி
காசுக்கு விற்கப்படும்
கற்கால
மனிதர்களின்
கடைசி பிள்ளைகள் - இந்த
மானிட
ரோபோக்கள் !
இவர்கள்
புத்திசாலிகள்
என்றழைக்கபடும் அடி முட்டாள்கள் !
குழந்தையின்
சிரிப்பை ரசிக்க
தெரியாத குற்றவாளிகள் !
இயற்கையின்
வலிமை அறிய
இயந்திர அடிமைகள் !
கூவும் குயிலை
மறந்து திரியும்
கிணற்று தவளைகள் !
வயல் வெளியை
மறந்து விட்ட
வசதி படைத்தவர்கள் !
நீங்கள் ....!
பாக்கள்
கொண்டு கவி பாட வேண்டாம் ! - ரோட்டோர
பூக்களை
கொஞ்சம் ரசித்து செல்லுங்கள் !
குயில் பாட்டை
கேட்க காட்டுக்கு செல்ல வேண்டாம் !
குழந்தையின்
சிரிப்பில் கொஞ்சம் மூழ்குங்கள் !
சுற்றமும்
நட்பும் கூடி குலாவ வேண்டாம் !
பெற்றோரின்
நலனயாவது கருத்தில் கொள்ளுங்கள் !
இருக்கும்
பொழுதில் இனியாவது மாறிவிடு !
இருக்கும்
உலகை இனி வருபவர்களுக்காவது மாற்றி கொடு !