பிடித்ததை தேர்ந்தெடுக்க
பிறப்பு என்பது
பொருட்க்காட்சியல்ல!
நினைத்ததை எல்லாம் முடித்துகாட்ட
இங்கு ஒன்றும் உன் ஆட்சியல்ல!
விட்டதை பிடிக்கும் நோக்கில்
விட்டத்தை நோக்கி
இருந்தால்
கட்டி இருக்கும் கோவணமும்
ஒருவேளை களவாடபடலாம்!
கெட்டதை புறந்தள்ளி
கிட்டியதை
கையில் அள்ளி
கட்டு உன் ராஜ்யத்தை - நல்லவர்
நால்வரால் உறவாடபடலாம்!
மனதில் பட்டதை உரக்கச்சொல்லி
உள் எண்ணங்களை
விளக்கிச்சொல்லி
திண்ணிய நெஞ்சம் கொண்டு நட
நீ மலர்களுக்கே
அழகு சேர்க்கலாம்!
கால மாற்றதினால்
காட்சிகள் மாறினாலும்
மனசாட்சியோடு நீ
தினம்
ஒத்து வாழ்ந்தால்
படக்காட்சி போல - உன்
வாழ்க்கை
'சுபம்' போட்டு முடியும்!
0 Comments:
Post a Comment