பொதுப்பெயர்


மருதமுத்து
மச்சான்,மாப்ள
தம்பி,அண்ணா
என ஆயிரம்
பெயர்களில்
அழைக்கப்பட்டவன்
நேற்று காலை
லாரியில்
அடிபட்டு
இறந்துவிட்டான்!
அருகில் நின்ற
ஆட்டோகாரர் முதல்
அனைவரும் சொல்கிறார்கள்

" பொணத்தை தூக்குங்கப்பா”!!!0 Comments:

Post a Comment