கருமை நிறம்

கருமை நிறம் !
பெருங்காலம் கடந்த தமிழன் வாங்கிய வரம் !
கொள்ளை கொள்ளும் கறுப்பழகும் 
கொள்ளை கொண்ட அவன் அழகும்
கைதட்டி சொல்லுமடா - 
மறத்தமிழன் மறந்த கதை !

கண் விழிக்கும் குழந்தை - முதலில் 
கண்ட நிறம் கறுப்பு ! - அவன் 
மூச்சடங்கி போன பின்பு செல்லும்
கல்லறையும் கறுப்பு !

முதலிலும் முடிவுலும் 
              முன் பின் இணைப்பாய் கறுப்பு !
கனவிலும் கருவறையிலும் 
                 காரணமாய் கறுப்பு !

வண்ணங்களில் அழகு என்றால்
                 கொள்ளை கொள்ளும் கறுப்பு !
வண்ணமெல்லாம் ஒன்று சேர்ந்தால்
                உதயமாகும் சிறப்பு !

போராளிகளின் போர்கால 
                   நண்பன் இவன் !
ஏமாளிகளின் இடைக்கால 
                  நண்பன் இவன் !

காதலில் தோற்றவர்கள் 
           கருமை நிற தாடி கொண்டது - காதலுக்கு
எதிர்ப்பை காட்ட அல்ல !- 
             காதலின் சிறப்பை காட்ட !

கலக்களெல்லாம் கறுப்புதான்!
            நம்ம காமராஜர் கறுப்புதான்!
சூப்பரெல்லாம் கறுப்புதான் 
           நம்ம சூப்பர் ஸ்டாரும் .....!

நிலையான நிறம் கறுப்புதான் !- மிக 
             கலையான நிறம் கறுப்புதான் !
            



என்னவளே !

கனவுகளும் வலிக்குதடி - உன்னை 
கண்மணிக்குள் நிறுத்திவிட !
உணர்வுகளும் துடிக்குதடி -இனி 
உன்னோடு கலந்து விட !

எண்ணங்களை சுமந்து வந்த 
என் நெஞ்சில் -  என்றும் 
வண்ண கனவுகளை சுமக்க வைத்து
என் வாழ்வோடு வாழ்பவளே !

கண்ணோடு கண்டவைகள் என்றும்
காட்சியோடு மறைந்துவிடும் !
கனவில் உன்னோடு கண்டவைகள் 
இறுதிவரை மூச்சாக கூட வரும் !

பண்னோடு இசை பாட 
   பாவலரும் இனி இல்லை!
உன் மடியோடு நான் தூங்க
     வேறு வரம் ஏதும் தேவை இல்லை !