கல்லுக்குள் ஈரம்

           
பெண்ணே
நீதான் நந்தவன சோலையில்
அசைந்தாடும் சந்தன மரக்கொடியோ?
உன் இமை அசைந்தாலே
என் இதயம் துடி துடிக்குதடி!

உன் கரு விழிகள் இரண்டும்
கூரிய கத்தி முனைகள்
என் உடம்பில் ஏற்படவில்லை
காயம் - மனதில் ஏற்பட்டது
காயம் அல்ல!
இந்த கவிஞன் சொல்லும் காதல் !

இவனுக்கு உன் துடி துடிக்கும்
இதயம் கூட வேண்டாம்
உன் படபடக்கும் கரு விழிகள் போதும்!
மௌன மொழி பேசியே
என்னை பைத்தியமாக்கி விட்டாயே !
அப்போதாவது
உன்னால் எனக்கு இதையாவது
செய்ய முடிந்ததே !


அவளின்றி ஓர் அணுவும் ......!

இப்போதெல்லாம்
என் இதயம்கூட
வேகமாக துடிப்பதில்லை!
உள்ளிருக்கும்
என் உயிருக்கு வலிக்குமே என்று!

என் இமைகள் கூட
வேகமாக துடிப்பதில்லை !
உன் தரிசனம் கிடைக்கும் பொது
உள் கட்சி பூசல் வேண்டாம் என்று!

என் கால்கள் என்ன விதிவிலக்கா ?
உன்னை கண்டு செல்ல
வேண்டுமென்றே கடிகார முட்கள்
போன்று கணிசமாக கடக்கிறது!

ஆனால் என் கைகள் மட்டும் விதிவிலக்கு!
உன்னுடைய ஓர
பார்வைக்கே ஓராயிரம்
கவிதைகள் என் வசம்!

சற்று நேரம் சிந்தித்த பின்பே
தெரிந்து கொண்டேன்!
என் உடலில் ஒரு அணு அசைந்தாலும்
அது உன்னை நினைத்தே அசைகிறது என்று!



நினைவிருக்கும் வரை


உயிர் உள்ளவரை
உன் நினைவு இருக்கும்!
உணர்வு உள்ளவரை
உன்னை மனது நினைக்கும்
கனவு உள்ளவரை
எனது காதல் ஜெயிக்கும்!

என்றாவது ஒருநாள்
என் மனது மறந்து இருக்கும்!
அன்றைய நாள்
என் உயிர் பிரிந்து இருக்கும்!
இதை காணும் எடமெல்லாம்
என் காதல் ஜெயிக்கும்!



அறியாத காதல்

பெண்ணே
கள்ள பார்வையும் காந்த சிரிப்பும்
கொண்ட உனக்கு ஏன் இவ்வளவு கஞ்சத்தனம் !
என்னை காதலி என்றுதானே சொன்னேன்!
என் ஆருயிர் காதலியே !
முறையாக அறியாத அந்த மூன்றெழுத்து
வார்த்தையை கூட புரியாத உனக்கு
ஏன் வன்மையும் கர்வமும் கொண்ட
வக்கற்ற மூன்றெழுத்து வாழ்வு ஏன்?
நீ நிலவில் வசிக்கிறாய் என்றல் கூட
நம்பும் நவகிறுக்கன் நான்!

ஏனென்றால்!
அந்த முழு நிலவில் தானே உன்னை கண்டேன் !
பவுர்ணமி நாள் நிலவில் கூட
முழு நிலவும் நீதான் தெரிந்தாய்!
ஊரே பார்க்கும் உலக நிலவில் அல்ல !
எந்த மன்னவனின் உள்ளம் என்னும் நிலவில்தான் !